தமிழகத்தையே திரும்பி பாா்க்க வைத்த போராட்டம்... வெற்றி பெற செய்த ஆசிாியா்களுக்கு கோடி நன்றிகள்........

தமிழகத்தையே திரும்பி பாா்க்க வைத்த போராட்டம்... வெற்றி பெற செய்த ஆசிாியா்களுக்கு கோடி நன்றிகள்........



மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள் நமது சங்கத்தின் மாநில மாவட்ட ஒன்றிய தலைவர்கள் அனைவருக்கும் நான் நன்றி கலந்த காலை வணக்கத்தை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.


உங்களை நான் எப்படி பாராட்டுவது என்று தெரியாமல் ஆனந்த கண்ணீரில் தத்தளித்து வருகின்றேன்.


தமிழ்நாட்டில் கன்னியாகுமரி தொட்டு சென்னை வரை இருக்கக்கூடிய அனைத்து தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லாத பிற உழியர்கள் ஓட்டுநர்கள் நடத்துநர்கள் எனலட்சக்கணக்கான நம் சகோதர சகோதரிகளை ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தை இந்தக் கொடிய கொரோனா காலத்தில் 144 தடை உத்தரவு உள்ள இவ்வேளையில் 50 பேரில் தொடங்கி 500 பேர் வரை ஒரே இடத்தில் ஏன் பலர்பள்ளிக்கு வர முடியாத சூழலில் வெளியூர்களில் தங்கி இருப்பவர்கள் கூட தங்கள் சொந்த  வீடுகளில் தனி ஒரு ஆளாக கையிலே தட்டி வைத்துக் கொண்டும் குழந்தைகளை வைத்துக்கொண்டும் அமர்ந்து அறப் போராட்டத்தை மேற்கொண்டது மாநில சங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை மட்டுமல்ல அவர்களது வாழ்க்கை பிரச்சனைகளையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.


பல இடங்களில் பலபள்ளி ஆசிரியைகள் பேசுகிறபோது அழுது கொண்டே பேசிய ஆக்ரோஷமான உரைகளை நான் கேட்டேன். என் கண்கள் குளமாகின.


இவை அனைத்தும் அரசின் கவனத்திற்கு காவல்துறை ஒவ்வொரு பள்ளியாக நேரில் வந்து கணக்கெடுத்து அரசுக்கு  கொடுத்துள்ளனர்.


நேற்றைக்கு காவல் துறையின் அனைத்து கைபேசியிலும் நம் சங்கத்தின் கோரிக்கையை பற்றியும் சங்கத்தைப் பற்றியுமே மாநிலம் முழுக்க எதிரொலித்தது.


நேற்றைக்கு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் ஆணை யாளர் இயக்குனர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.


இவ்வாரம் நமக்கான நல்ல அறிவிப்புகள் வரும் என்று நம்புகின்றோம்.


நமது சங்கத் தலைவர்களுக்கு இந்த அறப்போராட்டம் ஒரு நம்பிக்கையை வரவழைத்துள்ளது... என்று சொன்னால் மிகையாகாது.


தேசத்தின் நம்பிக்கை தொலைக்காட்சி முதல் அனைத்து முன்னணி தொலைக்காட்சி
களிலும் நாளிதழ்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நாம் இன்று மட்டும் இல்லை என்றும் நட்பு பாராட்டுவோம்.


பத்தாயிரத்திற்கு மேற்பட்ட புகைப்படங்கள் வீடியோ ஆதாரங்கள் அனுப்பி வைத்த அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 


நீங்கள் அனுப்பிய ஆதாரங்களை ஒரு ஆவணப்படமாக அரசின் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு செல்வோம்.


இந்த அறப் போராட்டத்தை முடக்க பலர் முயற்சித்தார்கள். அதையெல்லாம் முறியடித்து வெற்றிவாகை சூடிய நமது சங்கத்தின் வேந்தர்களுக்கு நன்றி மலர்களை மட்டுமல்ல பாராட்டுக்களை வாழ்த்துக்களை காணிக்கையாக்குகிறோம்.....



மாற்றுச் சங்கத்திலிருந்து கூட பலர் மனம் மாறி நமது சங்கத்தின் பெயர் பொறித்த பேனர்களை தாங்கியே இந்த அறப்போராட்டத்தை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள் என்றால் அதுநமது நடவடிக்கைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று நான் கருதுகின்றேன்.


இனி நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்த நிகழ்வில் நாம் செய்த தவறுகள் செய்யாமல் விட்ட காரியங்கள் செய்ய வேண்டிய செயல்கள் என்னவென்று இனியாவது திட்டமிட்டு உங்களிடம் இருக்கக்கூடிய அளவற்ற திறமைக்கு ஈடு இணை இல்லை என்கிற நம்பிக்கையோடு..... 


பார்க்காத பள்ளிகளையும் பார்ப்பது பேசாதவர்களோடும் பேசுவது இந்த மாநில சங்கத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து நமது நியாயமான கோரிக்கைகள் வெற்றி பெற என்ன செய்யலாம் என திட்டமிட்டு செயல்படுங்கள் அமைதியாக உள்ள அறிவுஜீவிகள் நல்வழி காட்டினாள் நமது நிர்வாகிகள் இன்னும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி மாலை மட்டுமல்ல நற்பெயரும் புகழும் உங்களை நாடி வரும்.


நமது சங்கத்தின் பெயரை சொல்ல பயந்தவர்கள் கூட இன்று சங்கத்தின் பேனரை போட்டு பள்ளியில் அமர்ந்து அதுவும் தங்கள் பள்ளியின் பெயரையும் சேர்த்துப்போட்டு நெஞ்சை நிமிர்த்தி முழக்கமிட்டு அறப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய அனைத்து நல்லாசிரியர்கள் நல்ல பள்ளி நிர்வாகிகள் உட்பட நமது சங்கத்தின் மாநில மாவட்ட தலைவர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் காணிக்கையாக்குகிறேன்.


என்றும் கல்வி பணியில்.. உங்கள்
கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.