சாலை வரி, இருக்கை வரி, இன்சூரன்ஸ் ரத்து செய்ய வேண்டி ஆர் டி.ஓ. அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

சாலை வரி, இருக்கை வரி, இன்சூரன்ஸ் ரத்து செய்ய வேண்டி ஆர் டி.ஓ. அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்



மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள் சங்க தலைவர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் 


வருகின்ற செவ்வாய்க்கிழமை 14.07.2020 காலை சரியாக பத்து மணிக்கு நமது சங்கம் மட்டுமல்ல தமிழகத்தில் ஓடும் அனைத்து வாகனங்களின் உரிமையாளர்கள் சங்கங்களின் சார்பில் இந்த கொரோனா நோய் தொற்று காலத்தில் மார்ச் 17ஆம் தேதி முதல் இன்று வரை எந்த சாலையிலும் நமது பள்ளி வாகனங்கள் ஓடவில்லை பள்ளிக்கூடம் என்றைக்கு திறக்கும் பள்ளி வாகனங்கள் இயங்கலாம் என்ற சிந்தனையோ என்னமோ தமிழக அரசிடம் இல்லை.


இந்த நிலையில் தனியார் பள்ளி வாகனங்களுக்கு சாலை வரி இருக்கை வரி இன்சூரன்ஸ் F C. செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவதும் வரிகளை கட்டாத போது நூறு சதவீதம் அபராதம் என்றும் ஆர்.டி.ஓ. அலுவலகமும் அவர்களுடைய ஏஜெண்டுகளாக உள்ள புரோக்கர்களும் நம் அனைவரையும் மிரட்டி வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் நாம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதி கேட்டு நிவாரணமாக ஓடாத காலங்களுக்கு சாலை வரி இருக்கை வரி இன்சூரன்ஸ் தகுதிச்சான்று இவைகளை இந்த ஆண்டுக்கு ரத்து செய்யக்கோரி வழக்கும் போட்டு இருக்கின்றோம்.


இதே பிரச்சனை தமிழகத்தில் உள்ள ஒன்றரை கோடி மூன்று சக்கர நான்கு சக்கர மற்றும் அதற்கு மேல் உள்ள வாகனங்களுக்கும் இருப்பதால் சக்திவாய்ந்த அமைப்பாக உள்ள தமிழ்நாடு வாகன உரிமையாளர்கள் சங்கத்தோடு நமது மாநில சங்கமும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடத்த திட்டமிட்டுள்ளோம்.


ஆர்ப்பாட்டத்தில் மேலும் பல கோரிக்கைகள் இணைக்கப் பட்டுள்ளதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நாடு முழுக்க இந்த போராட்டம் மிகப்பிரம்மாண்டமாக நடத்துவதால் நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம். என்ற உங்கள் மாவட்டத்தின் பெயரை போட்ட நிரந்தர பேனர்களை தயார் செய்து செவ்வாய்க்கிழமை காலை பத்து மணிக்குள் ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு பஸ் வேன் வைத்திருக்கிற பள்ளி நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு..... கௌரவம் பார்த்து உங்களால் போக முடியவில்லை என்றால் உங்கள் பள்ளி வாகனங்களின் டிரைவர்களை யாவது அனுப்பி வையுங்கள். நீங்கள் கலந்து கொண்டதற்கான புகைப்படம் எடுத்து பட்டினி போராட்டத்தை எப்படி வெற்றிகரமாக செய்து முடித்தீர்களோ அப்படியே வெற்றிகரமாக செய்து வீர முழக்கமிட்டு நமது சங்கத்தின் சார்பில் கட்டாயம் கண்டன உரை ஆற்றி கோரிக்கை மனுக்களில் கையெழுத்திட்டு மாபெரும் வெற்றி அடைய செய்ய வேண்டும்.


 இதில் உங்கள் யாருக்கும் எந்தவித கஷ்டமும் நஷ்டமும் கிடையாது. உங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நீங்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு வந்துவிடவேண்டும்.


உங்களுக்குரிய மரியாதையை அனைத்து சங்க தலைவர்களும் நிச்சயம் தருவார்கள்.


 நான் கிருஷ்ணகிரி மாவட்ட ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமையேற்று பேசுகின்றேன். நமது சங்க தலைவர்கள் அனைவரும் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருக்கக்கூடிய அனைத்து ஆர்.டி.ஓ அலுவலங்களிலும் உங்கள் சிம்மக்குரல் கர்ஜிக்கவேண்டும். 


அனைத்து பத்திரிக்கை ஊடகங்களிலும் உங்கள் பேட்டியும் செய்தியும் ஒளிபரப்பாக வேண்டும் .நான் அதை இங்கிருந்தே ஆயிரம் கண் கொண்டு காண வேண்டும். 


அதற்கேற்றார்போல் திட்டங்களை தீட்டுங்கள். இருப்பது இன்னும் 50 மணி நேரம் அதற்குள் நீங்கள் ஒருவருக்கொருவர் பேசி நமது பள்ளியின் 50,000 வாகனங்களின் உரிமையாளர்களான பள்ளி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று அன்புடன் வேண்டுகின்றேன்.


வேறு சந்தேகம் இருந்தால் நீங்கள் என்னோடு தொலைபேசியில் பேசலாம் .


நன்றியோடு உங்கள் 
கே. ஆர்.நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.