ஒன்றிணைவோம் வாருங்கள்....! மாநில தலைமை நிலைய செயலாளா் கோபிநாத் வேண்டுகோள்.....!!
அன்பார்ந்த பள்ளி தாளாளர்களுக்கும், நமது மாநில அனைத்து மாவட்ட சங்கத்தின் தலைவர்,செயலாளர்,பொருளாளர்,ஒருங்கிணைப்பாளர் மற்றும் அனைத்து சங்க உறுப்பினர்களுக்கும் எனது அன்பு கலந்த வணக்கம்,
வரும் 10.07.2020 வெள்ளிக்கிழமை அன்று நமது சங்கத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள தனியார் பள்ளிகளின் மாபெரும் பட்டினி போராட்டம் அறிவிப்பே தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு காவல்துறை , Police CID முதல் மாநில தலைமை செயலாளர் வரை மிகப்பெரிய எதிர்பார்ப்போடு நடைபெறவுள்ள நமது போராட்டத்தை உற்றுநோக்க ஆரம்பித்துள்ளன.
நமது சங்கத்தின் அனைத்து மாவட்டத்தின் தலைவர்,செயலாளர்,பொருளாளர்களின் கைப்பேசி எண் வாங்கப்பட்டுள்ளது. யாரும் எதற்கும் பயப்படவேண்டாம். அவர்கள் கேட்கும் கேள்விகள் - தங்கள் மாவட்டத்தில் எத்தனை பள்ளிகள் உள்ளன, எத்தனை பள்ளிகள் போராட்டத்தில் பங்கேற்கின்றன. எத்தனை ஆசிரியர்கள் ஊழியர்கள் பங்கேற்கிறார்கள், என்ன பாதுகாப்பு என்பதை குறித்தது. தைரியமாக பேசுங்கள்.
அதற்கு முன் தங்கள் மாவட்டத்தில் எத்தனை Nur&Pri, Matric,CBSE பங்கேற்கிறார்கள்,ஒரு பள்ளிக்கு எத்தனை ஆசிரியர்கள் என்பதனை உறுதி செய்யுங்கள்.
மாவட்ட வாரியாக உறுதி செய்து, நமது Whatsapp குழுவில் தங்கள் மாவட்டத்தின் பெயர், மொத்தம் எத்தனை பள்ளிகள் , எத்தனை ஆசிரியர்கள், ஊழியர்கள் குறித்த பதிவினை இன்று மாலை 5 மணிக்குள் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இது சாதாரண போராட்டம் அல்ல. நமது பள்ளிகளின் உரிமைக்காகவும், நமது பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியபெருமக்கள் மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரத்துக்காகவும், அனைத்து பள்ளி தாளாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி இப்போராட்டத்தை தமிழகமே திரும்பிப்பார்க்கூடிய மிகப்பெரிய போராட்டமாக மாற்றவேண்டும். ஊரில் 5 ஆசிரியர்கள் இருந்தாலும் அவர்களை சேர்த்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்போராட்டம் தனியார் பள்ளிகளின் ஒற்றுமையையும், நமது சங்கத்தின் வலிமையையைம் பறைசாற்றக்கூடியதாய் அமையவேண்டும்.
போராட்டத்தில் பங்கேற்க உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்,ஆசிரியபெருமக்களுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் எனது வாழ்த்துகளும் வணக்கங்களும்.
ஒன்றிணைவோம் - உயர்வோம்
என்றும் அன்புடன்
சித்த மருத்துவர்.
R.கோபிநாத்
மாநில தலைமை நிலைய செயலாளர்
தமிழ்நாடு
9443520978