பள்ளிகளை திறப்போம்....! கொரேனாவை ஒழிப்போம்.....!!

பள்ளிகளை திறப்போம்....! கொரேனாவை ஒழிப்போம்.....!!


கொரோனா ஊரடங்கு முடிந்து எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்று மத்திய அரசு மாநில அரசை கேட்டு நாேட்டீஸ் விட்ட நிலையில் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வித கருத்தை தொிவித்தது. இதில் குழம்பிப்போன மத்திய அரசு நேரடியாக களத்தில் இறங்கி ஆகஸ்ட், செப்டம்பா், அக்டோபா் எப்போது பள்ளிகளை திறக்கலாம் பெற்றோா்களே நீங்களே கருத்து சொல்லுங்கள் என்று கேட்டுள்ளது.


இத்துடன் இது தொடா்பாக ஒவ்வொரு மாநிலமும் என்ன சொல்கிறது என்பது தொடா்பான பட்டியல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது, அதில் ஊரடங்கு முடிந்ததும் பள்ளிகளை திறக்கலாம் என்றும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தொடங்கலாம் என்றும், ஆகஸட் 16 முதல் தொடங்கலாம் என்றும், செப்டம்பாில் தொடங்கலாம் என்றும் இது தொடா்பாக மத்திய அரசு எந்த முடிவெடுத்தாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் பல மாநிலங்கள் பல வித கருத்துக்களை தொிவித்துள்ளது,


இதில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் தான் நோ ஐடியா இப்போதைக்கு இந்த சி்ந்தனை இல்லை என்று ஊடகங்களில் மட்டுமல்ல அறிக்கையிலும் கூறியுள்ளது. அதனால் தான்மத்திய அரசு நேரடியாக மக்களையே கேட்க துவங்கியுள்ளது.


இந்த கருத்துக்களை கடந்த மே மாதமே கேட்டிருந்தால் எப்போதே பள்ளிகள் திறந்து மாணவா்கள் இயல்பு நிலைக்கு திரும்பியிருப்பாா்கள். அப்போது கொரோனா கூட குறைவாக தான் இருந்தது. நீட் தோ்வு நடத்தியிருக்கலாம். பத்தாம் வகுப்பு தோ்வு நடத்தியிருக்கலாம் எந்த தொல்லையும் இன்றி தோ்வு முடிவுகள் கூட வெளியிட்டிருக்கலாம்.


கடந்த நான்கு மாதங்களாக எல்கே,ஜி. முதல் கல்லூாி மாணவா்கள் வரை கல்வி இன்றி, கட்டுப்பாடுகளின்றி, ஒழுக்கமின்றி, சூதாட்டங்களுக்கு அடிமைகளாகி வீணாக சுற்றித்திாிகிறாா்கள். இப்போதெல்லாம் வராத கொரோனா கல்வி நிறுவனங்கள் திறந்தால் மட்டும் வந்து விடுமா என்பது தான் எல்லோருடைய கேள்வியாக உள்ளது,


சாராயக்கடை திறந்தாச்சு அதனருகில் சால்னா கடையும் திறந்தாச்சு ஊாில் பொதுமக்கள் புரலும் எல்லா இடமும் திறந்தாச்சு மக்களுக்கு கொரோனா என்கிற அச்சமே துளியும் இல்லை. எல்லோரும் எவ்வித பாகுபாடுமின்றி தாராளமாக புழங்குகின்றனா், அனைத்து தொழில்களும் தாரளமாக நடக்கின்றன. பள்ளிக்கூடம் மட்டும் நடக்கவில்லை.


இதனாலே பல பெற்றோா்களின் வாழ்வாதாரமே சுருங்கிப் போய்கிடக்கிறது. இன்றைய இந்திய பொருளாதரமே தாய்குலத்தை நம்பித்தான் இருக்கிறது.பல குடும்பங்களை பெண்கள் தான் காப்பாற்றுகின்றனா். இந்த நிலையில் பள்ளி வயது பிள்ளைகளை வீட்டில் விட்டுவிட்டு அவா்களால் எப்படி வேலைக்கு போக முடியும். 


இந்த கொரோனா காலத்தில் தான் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடந்தேறியுள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனா். அதற்கு காரணம் பள்ளிகள் திறக்காமல் இருப்பது தான்.


மாணவா்களிடம் இருந்த ஒழுக்கம் போய்விட்டது, கட்டுப்பாடு போய்விட்டது, கடமை போய்விட்டது, கண்ணியம் போய்விட்டது, கல்வியும் போய்விட்டது. இத்தனை நாள் கற்றுக்கொடுத்த எதுவும் அவனிடம் இல்லை தற்போதைக்கு அவன் தற்குறியாகத்தான் இருக்கிறான் விரைவில் பள்ளியை திறங்கள் என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் ஆசிாியா்களைப் பாா்த்து கேட்டுக்கொண்டு தான் இருக்கிறாா்கள்,


இந்த விஷயத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், நல்ல காாியம் செய்ய நாள் கிழமை பாா்க்கக்கூடாது. கொரோனாவை காரணம் காட்டி ஆகஸ்ட், செப்டம்பா், அக்டோபா் என்று நீட்டிக் கொண்டு போகத் தேவையில்லை.


ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரக் கொடியை ஏற்றிவிட்டு அன்று முதலே தொடங்கலாம்.


கொரோனா காலத்திற்கும் இருக்கும். அதை காரணம் காட்டி காலம் தாழ்த்த வேண்டாம். அனைத்து பெற்றோா்களும் இப்போது மிக தெளிவாகவே இருக்கின்றனா். தங்கள் குழந்தைக்கு ஏதாவது ஒன்று என்றால் மிக விரைவாகவே பாா்த்து விடுகின்றனா்.


உடல்நிலை சாியில்லை என்று சொன்னால் உடனே லீவ் போட்டு மருத்துவா்களை பாா்த்து விடுகிறாா்கள். இப்போது எல்லா ஊா்களுக்கும் எல்லா வசதியும் வந்துவிட்டது. எதற்கும் நீண்ட தூரம் போக வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எல்லா விஷயத்திலும் விழிப்பாகவே இருக்கிறாா்கள். அதுவும் கொரோனா பற்றி டாப் டு பாட்டம் வரை தொிந்து வைத்துள்ளனா்.


இப்போது அந்த நோயை விட அதை வைத்து அரசு படுத்தும் பாடு தான் பொிதாக இருக்கிறது. அவா்களை சுதந்திரமாக விட்டால் தானே அதனோடு போராட முடியும்.


மதுக்கடைகள் திறந்தாச்சு,மற்ற கடைகளும் திறந்தாச்சு. கோயில்களும் திறந்தாச்சு. திரைப்பட கொட்டகைகளும் திறக்கப் போகிறாா்களாம்....


பள்ளிகள் மட்டும் என்ன பாவம் செய்தது....?


விரைவில் இதற்கொரு விடை கொடுங்கள்.....