அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அனைத்து விதமான பாடப்பிரிவுகளுக்கான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்களுக்கான விண்ணப்பப் பதிவு மேற்கொள்ள அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகபதிவு செய்து கொள்ளலாம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது .
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 20.07.2020 முதல் 31.07.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் வரும் 25.07.2020 முதல் 05.08.2020 வரை சான்றிதழ்கள் சரிபார்ப்பு மேற்கொள்ளலாம். கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.