நமது பள்ளிகளின் மேம்பாட்டை பாதுகாப்போம்....!. மாநில பொதுச் செயலாளா் உருக்கமான வேண்டுகோள்.....!!
என் உயிரினும் மேலான பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் என் இனிய மாலை வணக்கம் நான் தான் உங்கள் நந்தகுமார் உங்களோடு மனம் விட்டு பேசுகின்றேன்.
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தை 1988ல் என்னால் தொடங்கப்பட்டு..,
இன்றுவரை பட்டி தொட்டி எங்கும் தனி ஒருவனாக சிறிய பள்ளி முதல் பெரிய பள்ளி வரை ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளையும் சந்தித்து வாரந்தோறும் சிறுசிறு கூட்டங்களை நடத்தி மாவட்டம் மாநிலம் என்று இன்றைக்கு கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை இந்த சங்கத்தை ஒரு மாபெரும் இயக்கமாக மாற்றி.....
அது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சியையும் எதிர்க்கட்சியையும் அரவணைத்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி உயர் நீதிமன்றம் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடி...
சங்கங்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டி பொறாமைகளை அகற்றி...
நமதுசங்கத்தை நசுக்கி விட வேண்டும் என்று எத்தனையோ சதிகாரர்கள் செய்த அத்தனை சதிகளையும் முறியடித்து....
பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கி...
ஆயிரக்கணக்கான பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்தது மட்டுமல்ல...
சிறந்த பள்ளிகளுக்கான விருதுகள் வழங்கி ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் பல்வேறு பயிற்சிகள் தந்து .....
பள்ளி நிர்வாகிகளின் ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக அணுகி தீர்த்து வைத்து யாரையும் ஏமாற்றாமல்....
பல்துறை அதிகாரிகளின் லஞ்ச லாவண்யத்திற்கு எதிராக எல்லா இடங்களிலும் குரல்கொடுத்து.....
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் உள்ள அனைத்து ஊடகங்களிலும் நம்முடைய சங்கத்தின் குரலை சிங்கமாக கர்ஜித்து சங்கநாதம் பாடி உள்ளோம்....
இதுவரை நமது மாநில சங்கத்தை சாதி மத இன மொழி கட்சி பேதம் கடந்து பள்ளி நிர்வாகிகளின் நலத்தை மட்டுமே கருத்தாகக் கொண்டு இன்றைக்கும் என்றைக்கும் செயல்படும் இந்த சங்கம்......
ஒவ்வொருவருக்கும் ஒரு கட்சி இன மத மொழி பேதம் இருக்கும் நானும் மனிதன் தான் எனக்கும் இருக்கும்.
ஆனால் அதை நான் எங்கும் எக்காலத்திலும் யார் மீதும் திணித்தது கிடையாது.
நான் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாரதிய ஜனதா கட்சியில் தான் இருக்கின்றேன்.
ஆனால் நான்எந்தக் கட்சி என்று இதுவரை யாருக்கும் தெரிந்திருக்காது.
நான் காட்டிக் கொண்டதில்லை
யார் மனதையும் புண்படுத்தும்படி
நான் நடந்து கொண்டதும் இல்லை.
என்னை தற்போது பாரதிய ஜனதாக் கட்சியின் கல்வியாளர் பிரிவின் மாநில செயலாளராக தலைமை அறிவித்திருக்கிறது. அதன்மூலம் எனது கல்வி பணி இன்னும் சிறக்குமே தவிர என் கொள்கைகளை நான் யார் மீதும் எப்பொழுதும் திணிக்க மாட்டேன்.
மத்திய அரசின் செல்வாக்கோடு மாநில அரசும் மத்திய அரசும் தனியார் பள்ளிகளுக்கு செய்ய வேண்டிய அத்தனை உதவிகளையும் சட்டங்களையும் கல்வித்துறையில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்து தனியார் பள்ளிகளை மேன்மேலும் உயர்த்துவதற்கு இந்த பதவியை நான் நிச்சயம் பயன் படுத்திக் கொள்வேன்.
ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் நான் ஒவ்வொரு வரிடமுடன் கெஞ்சி கூத்தாடி நிற்பதைக் காட்டிலும் செய்து கொடு என்று உத்தரவு போடும் இடத்திலிருந்து செய்து முடிக்க கடமைப்பட்டுள்ளேன்.
இப்பதவி இதோடு நின்று விடாது இன்னும் இன்னும் மேலும் உயர்ந்து ஒளிவீசும் அளவுக்கு நான் என்னை உயர்த்திக் கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி உங்களையும் உயர்த்துவேன் என்கிற உறுதியோடு என்னோடு பயணிக்கும் அத்தனை பேருக்கும் நல் வழிகாட்டி சாதி மத இன மொழி கட்சி அரசியலை மறந்து என் கல்வி பணி என்றும் தொடரும் என்ற உறுதியோடு பாரதிய ஜனதா கட்சியின் கல்வியாளர் பிரிவுக்கு மாநில செயலாளராக பொறுப்பேற்றுள்ள நான் ....
அகில இந்திய தலைவராக உள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு ரமேஷ் போக்ரியால் அவர்களின் வழிகாட்டுதலோடு....
தமிழக தனியார் பள்ளி கல்வி மேம்பாட்டுக்கும் மட்டுமல்ல நான் பணியாற்றிக் கொண்டு இருக்கக்கூடிய எஜுகேஷன் புரோமோஷன் சொசைட்டி ஃபார் இந்தியா என்கிற மாபெரும் பல்கலைக்கழக அமைப்பு மட்டுமல்ல....
.
நான் இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருவதை நீங்கள் அறிவீர்கள் என்று நான் நம்புகின்றேன்.
என்னுடைய ஒவ்வொரு அசைவும் தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல இந்திய திருநாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்காமல் நமது பாரத நாடு வளர்ந்தோங்கி உலகத்திலேயே சிறந்த உயர்வான நாடாக மாற்றுவதில் முன்கை எடுத்து நிற்பேன்.... என்கிற உறுதியோடு நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்க நான் என்றும் கல்வி பணியாற்றி வெற்றிவாகை சூட வாழ்த்துங்கள் என்று வணங்கி....
நல்வாழ்த்துக்கள் கூறிய அத்தனை நல்உள்ளங்களுக்கும் நன்றி கூறுகின்றேன்.
நன்றியுடன் ..
என்றும் உங்கள்
கே.ஆா். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.