ஆகஸ்ட் முதல் டிவியில் வகுப்பு வாரியாக பாடம்
தமிழகத்தில் ஆகஸ்ட் முதல் டிவியில் வகுப்பு வாரியாக பாடம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறியுள்ளார்.
புதிய வழிமுறை:
இந்தியாவில் கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதல் இன்று வரை பல்வேறு முறைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு பிரச்சனைகளை அரசும் மக்களுக்கும் எதிர்கொண்டு வருகின்றனர். மாணவர்கள் இந்த ஊரடங்கால் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
மாணவர்களின் இந்த 2020 ஆம் கல்வியாண்டு பெரும் கேள்வி குறியாகி உள்ளது. இதனை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஊடரங்கால் தமிழகத்தில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் முதல் டிவியில் வகுப்பு வாரியாக பாடம்:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் 14 தொலைக்காட்சிகளின் மூலம் ஆகஸ்ட் 1 முதல் வகுப்பு வாரியாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது, இந்தியாவில் முதல் முறையாக தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தும் முதல் மாநிலம் தமிழகம்தான் என்றும் மேலும் பள்ளி திறப்பு, பாடங்கள் குறைப்பு குறித்து பரிசீலைனை செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.