சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ! நமது சங்கத்திற்கு கிடத்த மகத்தான வெற்றி.....!!
தனியார் பள்ளிகள் இந்த கல்வியாண்டிற்கான புதிய கல்வி கட்டணம் 40% வரும் 30.08.2020க்குள் பெற்றுக்கொள்ளலாம்அடுத்து பள்ளிகள் திறந்தபின் 35% கல்விக்கட்டணம் பெற்றுக்கொள்ளலாம்.அடுத்து 31.09.2020க்குள் பழைய 2019-2020 ஆண்டில் நிலுவையிலுள்ள கட்டணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
இத்தீர்ப்பு !!!
தமிழக அரசிற்கு பேரிடி. தனியார் பள்ளிகளை ஏளனமாகவும், எகத்தாளமாகவும் எள்ளிநகையாடிய ஒவ்வொருவருக்கும் பேரிடி.தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பற்றி சற்றும் கவலைப்படாத அத்துனைப்பேருக்கும் பேரிடி நமது சங்கத்திற்கும், தனியார் பள்ளிகளுக்கும் கெடுதல் நினைத்திட்ட அந்த பெரிய்யயயயயய உள்ளங்களுக்கும் உப்புமா சங்கங்களுக்கும் பேரிடி .
மாண்புமிகு நீதியரசர் அவர்கள் அரசிற்கு வைத்திட்ட கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் திணறிய தருணங்களை என்னவென்று சொல்வது.......?
இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பானது தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து நிற்கும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் வயிற்றில் பால் வார்த்த தீர்ப்பு !!!
வரவேற்கத்தக்க தீர்ப்பு !!!
கொண்டாடப்பட வேண்டிய தீர்ப்பு !!!
இவை அனைத்திற்கும் ஒற்றை மனிதனாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளின் தாளாளர்களுக்கும், ஆசிரிய பெருமக்களுக்கும், ஊழியர்களுக்கும் உற்ற நண்பனாகவும், காப்பாளராகவும் தாயுள்ளம் கொண்டு எங்களின் குடும்பத்திற்கும், பள்ளிகளுக்கும் வாழ்வளித்த பெருமகனார் மதிப்பிற்கும்,மரியாதைக்கும் உரிய "தனியார் பள்ளிகளின் உரிமைக்குரல்"
.Dr.K.R.நந்தகுமார்
அவர்களுக்கு நமது சங்கத்தின் சார்பாகவும், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனியார் பள்ளிகள் சார்பாகவும் கோடானு கோடி நன்றிகளை தங்களுக்கு காணிக்கையாக்குகின்றோம்.
பட்டினி போராட்டம்
நமது சங்க பொதுச்செயலாளர் அவர்கள் தலைமையில் ஓரணியாய் நின்று, வென்று காட்டிய போராட்டம் , இன்று தமிழகத்தையே திரும்பி பார்க்க செய்திட்ட தீர்ப்பு !!!
ஓரணியாய் திரள்வோம்,
சாதனைகள் பல புரிந்து, புதிய சரித்திரம் படைப்போம்.
நமது பொதுச்செயலாளர் கரம்பற்றி சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும்
ஒன்றிணைவோம் - உயர்வோம்.
என்றும் நன்றியுடன்
தாளாளர்கள், நிர்வாகிகள்
புதுக்கோட்டை மாவட்டம்.