ஏழை மாணவர்கள் இலவச கல்விக்கு விண்ணப்பிக்கலாம் – பல்கலைக்கழகம் அறிவிப்பு!!
ஏழை, எளிய மாணவர்கள் இலவசக் கல்விக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் யாரும் எதிர்பாராத விதமாக 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. கொரோனா தொற்று காரணமாக இந்த வருட கல்லூரி சேர்க்கை ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் கலை கல்லுரிகள் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பமும் இன்று முதல் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
ஏழை மாணவர்களுக்கான இலவச கல்வி:
இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம் ஆனது ஏழை மாணவர்களுக்கான ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் இலவச கல்விக்கு ஜூலை 27ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.