கிருஷ்ணகிாி மாவட்ட பள்ளி நிா்வாகிகளுக்கு ஆசிாியா்களுக்கு மனமாா்ந்த நன்றிகள்........

கிருஷ்ணகிாி மாவட்ட பள்ளி நிா்வாகிகளுக்கு ஆசிாியா்களுக்கு மனமாா்ந்த நன்றிகள்........



அன்பார்ந்த பள்ளி நிர்வாகிகளுக்கு இனிய காலை வணக்கம்🙏🏻


நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 10.07.2020 நடைபெற்ற அறப்போராட்டத்தில் தங்கள் ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களுடன் கலந்துகொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. எந்த ஒரு செயலுக்கும் நல்லதொரு தொடக்கம் மிக அவசியமாகிறது. அந்த வகையில் நேற்றைய அறப்போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து பள்ளி தாளாளர்களுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் பிற பணியாளர்களுக்கும் நமது சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளையும் , பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.



இதே ஒத்துழைப்புப்பும், ஒற்றுமையும் நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும் .இந்த அறப்போராட்டத்தில் கலந்து கொள்ளாத பல பள்ளிகள் என்ன காரணத்தினால் கலந்து கொள்ளவில்லை என்பது தெரியவில்லை அது என்ன காரணமாக இருந்தாலும் நாம் எல்லாம் ஓரினம் நம்மில் ஒருவருக்கு ஒரு பிரச்சனை என்றால் நம் அனைவருக்கும் ஏற்பட்ட ஒரு பிரச்சனையாக கருதி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது இந்த காலக் கட்டத்தில் மிகவும் அவசியம். இப்படி எல்லாம் செய்துவிட்டால் நடந்து விடுமா , கேட்டது கிடைத்துவிடுமா என்கிற இதுபோன்ற பல கேள்விகள் அனைவரின் மனதிலும் இருக்கலாம் அதனால்தானோ  என்னவோ  ஒரு சில பள்ளிகள்  கலந்து கொள்ளவில்லையோ தெரியவில்லை!?


ஆனால் நமது மாநில பொதுச்செயலாளர் டாக்டர்.கே ஆர் நந்தகுமார் அவர்களின் பெரும் முயற்சியாலும் இடைவிடாத ஓயாத ஓய்வறியாத உழைப்பினாலும் தனியார் பள்ளிகள் அடைந்த பயன்கள் எவ்வளவோ இருக்கின்றது. அவைகளெல்லாம் காலங்காலமாக நமது சங்கத்தில் இருக்கக்கூடிய  பள்ளி தாளாளர்களுக்கு தெரியும். நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரையில் நமது சங்கத்திற்கு யார் வேண்டுமானாலும் எந்த பொறுப்பிற்கும் வரலாம் முன்னே ஓடக்கூடிய ஒரு குதிரையை தட்டிக்கொடுத்து அதன்பின்னே ஓடிவர இங்கே நான் உட்பட அனைவரும் தயாராக இருக்கின்றோம்.



நம்மை சிறப்பாக வழிநடத்த நமது மாவட்டத்திற்கு கிடைத்த பெரும் அரிய பரிசு நமது மாநில துணைத்தலைவர் டாக்டர் சீனி. திருமால் முருகன் ஐயா அவர்கள்.நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இப்பொழுது வரை இருக்கக்கூடிய சங்க நிர்வாகிகள் நமது சங்க உறுப்பினர்கள் அனைவரையும் சம நோக்கில் ஒருங்கிணைத்து தான் ஒவ்வொன்றையும் செய்து வருகின்றோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.🖊️


ஏதோ ஒரு  காரணத்தால் தொடர்அங்கீகாரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பள்ளிகளின் மன உளைச்சலை கல்வித்துறை அலுவலர்களுடன் பேசி தீர்த்து வைத்து இருக்கின்றோம்.🖊️வாகன சம்பந்தமான பல பிரச்சனைகளை போக்குவரத்து அதிகாரிகளுடன் பேசி தீர்வு கண்டிருக்கிறோம். 🖊️ஐந்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என அறிவித்த உடன் தமிழகத்திலே முதன்முதலாக ஊடகங்களை அழைத்து அதனால் ஏற்படும் இன்னல்களை அரசாங்கத்திற்கு எடுத்துரைத்து தீர்வுகாண முற்பட்டது நமது கிருஷ்ணகிரி மாவட்ட சங்கம்.🖊️இப்போதும் நர்சரி பிரைமரி பள்ளிகளை 8ஆம் வகுப்பு வரை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தக் கூடிய கோரிக்கையை முதன்முதலாக முன்வைத்து இருப்பது நமது மாவட்ட சங்கமே.



இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கெல்லாம் காரணம் நம்முடைய ஒற்றுமையும் ஒத்துழைப்பும் தான் இன்று தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகப்பிரம்மாண்டமாக மிக அற்புதமாக இந்த அறப்போராட்டத்தில் கலந்துகொண்டு இருக்கின்றார்கள் நம்முடைய மாவட்டத்தில் 100% கலந்து கொண்டிருந்திருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.இனியும் நீங்கள் யோசித்து தயங்கி மயங்கி இருந்தால் யாரும் நம்மை காப்பாற்றிட முன்வர மாட்டார்கள் என்பதை  தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.எப்போதும் நமது சங்கம் மட்டுமே அனைவருக்கும் உறுதுணையாக இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.  இனியேனும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து 100% சதவீதம் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


 சங்கப் பணியில்... 
 P.S. கணேசன், மாவட்ட தலைவர், கிருஷ்ணகிரி மாவட்டம்