திருவள்ளூா் ஆா்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்

திருவள்ளூா் ஆா்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்



14 ஜூலை 2020, தமிழ் நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேசன் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கம் சார்பாக மாநில பொதுசெயளாளர் திரு.K.R.நந்தகுமார், மாநிலத் தலைவர் திரு.A.கனகராஜ் மற்றும் மாநில பொருளாளர் திரு.R.நடராஜன் அவர்களின் அறிவுறுத்தலின் படி, EMI தவணை வட்டி ரத்து செய்தல், ஓட்டுனர் நலவாரியம் அமைத்தல் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூர் மாவட்டம் சார்பாக செங்குன்றம் சுங்கச்சாவடி அருகில் உள்ள RTO அலுவலகம் முன்பு மாபெரும் “கவன ஈர்பு கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது.


மாவட்டத் தலைவர் திரு.N.ராஜன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலர் திரு.N.மணிவண்ணன் அவர்கள் முன்னிலையில் மற்றும் எலைட் பள்ளி குழுமத்தின் நிர்வாகி முனைவர் G.பால் செபாஸ்டியன் அவர்களின் வழிகாட்டுதலின் படி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் பெருவாரியாக ஓட்டுனர்களும் நடத்துனர்களும் பங்கேற்றனர். முறையான சமூக விலகலைக் கடைப்பிடித்து, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் அறவழியில் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.