கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் கொரோன வைரஸ் தொற்றின் பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் வருகின்றது.
மேலும் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற வேண்டும்.
தற்போது ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் இந்த ஆண்டு முதலே ஆன்லைன் மூலமாகவே தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பாக 2 நாட்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதளம் தொடங்கி வைக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்திருக்கிறார்.
வெவ்வேறு கல்லூரியில் விண்ணப்பிப்பதால் இரண்டு கல்லூரிகளிலும் நடைபெறும் நேர்காணலை சந்திக்க நேரிடும் சூழல் என்பது இந்த ஆன்லைன் விண்ணப்பம் மூலமாகவும், கலந்தாய்வு மூலமாகவும் தவிர்க்க முடியும். எனவே ஒற்றை சாளர ஆன்லைன் விண்ணப்பம் மூலமாக ஒரே நேரத்தில் பல விருப்ப கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கக்கூடிய பலனும் மாணவர்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதற்கடுத்த நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்து உள்ளது. இன்னும் கொரோனா தாக்கம் குறையாத நிலையில் மாற்று நடவடிக்கைகள் ,மேற்கொள்ளப்படுவதில் இப்பொது காலை அறிவியல் கல்லூரிகளும் இணைந்துள்ளன.