வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தேதி அறிவிப்பு.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பப் பதிவினை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் பல்வேறு கல்லூரிகளில் இருந்து இளங்கலை பட்டங்களுக்கான விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்களுக்கு சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதில், கோவை வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் கீழ் உள்ள உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகள் அனைத்திலும் மாணவர் சேர்க்கை ஆனது வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
10 இளங்கலை பாடப்பிரிவுகளில் ஏறக்குறைய என மொத்தம் 5000 காலியிடங்களினை நிரப்புவதற்கான எனவே வேளாண் படிப்புகளில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பங்களை கல்லூரி இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம்.