நா்சாி பிரைமாி பள்ளிகள் தரம் உயர்த்தக்கூடாது என்கிற சலசலப்பு விரைவில் அடங்கிவிடும்... நல்லது நடந்தே தீரும்.... நாகை காா்த்திக் நம்பிக்கை......

நா்சாி பிரைமாி பள்ளிகள் தரம் உயர்த்தக்கூடாது என்கிற சலசலப்பு விரைவில் அடங்கிவிடும்... நல்லது நடந்தே தீரும்.... நாகை காா்த்திக் நம்பிக்கை......


இப்ப சம்பந்தமில்லாமல் நடக்கிற ஒரு சிறு சலசலப்பு.  இது சீக்கிரம் தெளிந்துவிடும்.  யாரும் கவலைபடாதீங்க. நடப்பது நடந்தே தீரும். நாளைய உலகம் நமக்கே.


ஐந்து முதல் எட்டு வரை தொடக்கப்பள்ளிகளின் தரம் உயர்த்தக்கூடாது என்று சிலர் முயற்சிப்பது வேதனை அளிக்கிறது.  உலகில் அனைவருக்கும், அனைத்துக்கும் பரிணாம வளர்ச்சி என்பது பொதுவானது,  கண்டிப்பாக  தேவையானது.  தொடக்கப்பள்ளிகளின் வளரச்சி கூடாது என்பது மிகவும்  தவறானது.


உங்களை இந்த சமுகம் உயர்ந்த நிலையில் பார்க்கிறது.


மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியராக இருந்துகொண்டு, மாணவர்கள் படிக்கும் தொடக்கப் பள்ளிகளின் தரம் உயர்த்தக்கூடாது என்ற குறுகிய எண்ணம் வரலாமா??.


ஒரு பள்ளி வளர்ந்தால் இப்படி.வேறு பள்ளி வளர்ந்தால் அப்படி....என்பது பாசிசம்.


சட்டங்களும், திட்டங்களும் மக்களின்  தேவைக்கேற்ப அவ்வப்போது மாற்றப்பட வேண்டும். இது,  ஆண்டாண்டுகளாக நடந்துவரும் நிதர்சனம்.


பல ஆண்டு பெறு முயற்சிக்கு பிறகு,  தொடக்கப் பள்ளிகளின் தரம் அரசால்  உயர்த்தப்படும் சூழ்நிலை வரும்போது,  காத்திருந்து எதிர்ப்பது ஏற்கத்தக்கதல்ல.


பட்டி, தொட்டி, குக்கிராமங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் பாதிக்கப்படுவார்களாம். எப்படி என்பதை சொன்னால் நலமாயிருக்கும்.


கட்டாய இலவசக் கல்வி  சட்டத்தின் அடிப்படை உரிமையே தகர்ந்துவிடுமாம். 
எப்படி என்று  சொன்னால் நலமாயிருக்கும்?.


அரசு பள்ளிகளின் வளர்ச்சியை காப்பதற்கும், தனியார் பள்ளிகளின் வளர்ச்சியை தடுப்பதற்கும் என்ன சம்பந்தம்.   எப்படி என்று சொன்னால் நலமாயிருக்கும். 


ஐந்தாவது வகுப்புவரை சிறப்பாக இயங்கி வந்த தனியார் பள்ளிதான், இன்று நல்ல நிலைக்கு வளர்ந்து  நிகர்நிலை பலகலைகழகமாக உயர்ந்துள்ளது உங்களுக்கு தெரியுமா?.


தனியார்துறை, அரசுதுறை இரண்டுமே அரசின் இரு கண்கள். இரண்டின் வளரச்சியே இந்திய நாட்டின் வளர்ச்சி.சேவை என்பது வேறு.தொழில் என்பது வேறு. தொடக்கப்பள்ளிகள் வேலை வாய்ப்பு தரும் தொழில் வளர்ச்சியுடன் சேவை எண்ணமும் கொண்டது.


தொழில் என்றால் அதில் வளர்ச்சி இருக்கவேண்டும். பல ஆண்டுகளாக ஐந்து வகுப்புவரை சிறப்பாக நடந்த தொடக்கப் பள்ளிகள் தற்போது வளர்ந்து அரசால் எட்டாம் வகுப்புவரை தரம் உயர்த்தப்படுவதில் எந்த தவரும் இல்லை. அரசின் முயற்சியை, ஏழை மாணவர்களின் வளர்ச்சியை  தடுப்பீர்களா?. 


சாவி கொடுத்ததால் இந்த  இயக்கமா ?.


ஆசிரியராக சேர்ந்து, ஆசிரியராக பணிமூப்படைவது எப்படி?. 
தலைமை ஆசிரியராக ஓய்வு பெறுவது எப்படி?.


அவருக்கு என்றால் வெண்ணெய். இவருக்கு என்றால் சுண்ணாம்பு!!. சமுதாய உணர்வோடு, நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்.
இது நியாயமா?.


இந்திய தேசிய கல்விக் கொள்கை பற்றி உங்களுக்கு தெரியும்.  அதை ஆதரிப்பீர்களா?  எதிர்ப்பீர்களா?.


நிலம் வாங்குபவர்கள், வீடு கட்டுபவர்கள், குழந்தைபேறு பெறுபவர்களை ஒன்றுக்குமேல் வேண்டவே வேண்டாம் என்று சொன்னால்  ஏற்பார்களா?


பணபலமும், மனபலமும், இடவசதியும் இருந்தால், எத்தனை வகுப்புகள் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்,  நடத்தலாம், ஏழை மாணவர்களுக்கு  சேவை செய்யலாம்.


கல்வி வளர்ச்சியில் அரசுக்கு  தோள் கொடுத்து, அரசுடன் சேர்ந்து தொடக்கப்பள்ளிகள் செயல்படுகிறது.


மாதா, பிதா..  அதற்கு அடுத்தது குரு.. அதற்கு பிறகுதான் தெய்வம்.  சமுகம் உங்களை இந்த உயரந்த நிலையில் பார்க்கிறது.  


ஆனால், நீங்கள்  ஏழை மாணவர்களின் கலவியையும், வளர்ச்சியையும் தடுக்கும் வகையில் செயல்படுவது மிகுந்த மனவலியை ஏற்படுத்துகிறது.


தொடக்கப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு யாரும் தடையாக இருக்காதீர்கள்!!.


வரப்பு உயர..  நீர் உயரும்.


அன்புடன்


காா்த்திக். நாகை