அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் நுழைவுத்தேர்வு ரத்து

அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் நுழைவுத்தேர்வு ரத்து


சென்னை பல்லாவரத்தில் செயல்படும் வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் கல்வி நிறுவனத்தில் உயர் கல்வியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வினை ரத்து செய்திருப்பதாக நிறுவனம் சார்பில் செய்தி குறிப்பு வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் பரவி வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கான தேர்வுகள் தள்ளி வைக்கப்படும் ரத்து செய்யப்படும் வந்தது.


இந்நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து பல்வேறு கல்வி நிறுவனங்கள் அடுத்த கல்வியாண்டிற்கான நுழைவுத்தேர்வுகள் மாணவர் சேர்க்கை ஆகியவற்றினை தொடங்க உள்ளது.


இந்நிலையில் சென்னை பல்லாவரத்தில் செயல்படும் வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் கல்வி நிறுவனத்தில் உயர் கல்வியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வினை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது.


மேலும் 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும் எனவும், அதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட்டுள்ளது.