அறப்போராட்டத்தை அவரவா் பள்ளியிலேயே நடத்துவோம்...! ஆற்ப்பறிப்போம் ...! வெற்றி பெறுவோம்....!

அறப்போராட்டத்தை அவரவா் பள்ளியிலேயே நடத்துவோம்...! ஆா்ப்பறிப்போம் ...! வெற்றி பெறுவோம்....!



மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய வணக்கம்


நான் தான் உங்கள் நந்தகுமார் நமது மாநில சங்கத்தின் மதிப்புமிகு தலைவர்  பெருமக்கள் அனைவரும் உடனடியாக வருகின்ற பத்தாம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் பட்டினிப்போராட்டம் பல்வேறு பள்ளி நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று அவரவர் பள்ளியிலேயே பள்ளி மைதானத்தில் சமூக இடைவெளியோடு அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு முககவசம் அணிந்து கிருமிநாசினி உடன் நமது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி உங்கள் கம்ப்யூட்டரில் அல்லது கையால் எழுதப்பட்ட தட்டிகளுடன் ஆசிரியர்களை மட்டுமல்லாது 
பிற அனைத்து ஊழியர்களுக்கும் தகவல் தந்து வரவழைத்து அமரவைத்து
 பட்டினி போராட்டம் நடத்தி புகைப்படம் எடுத்து உடனடியாக எனக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்ப வேண்டும் என்று வேண்டுகின்றேன். 


அதற்கு முன்பாக கீழே அனுப்பி உள்ள  மாதிரி போஸ்டரைப் போல் உங்கள் மாவட்டத்தின் பெயரை போட்டுதயாரித்து எனக்கு அனுப்பினால் தமிழ்நாடு முழுக்க நான் அனுப்புவேன்.


 இப்படி அனைத்து மாவட்டங்களும் உடனடியாக நாளை மாலைக்குள் போஸ்டரை அனுப்பிட வேண்டும் .


உங்கள் திறமைகளை காட்டுங்கள் உட்கார்ந்த இடத்திலே ஒன்றும் கிடைக்காது . சிங்கம் போல் சீறி எழுந்து நமது சங்கத் தலைவர்கள் செயல்பட வேண்டும். செயல்படுவது போலாவது நீங்கள் நடிக்க வேண்டும். 


அதற்கான வேலைகளை இன்றைக்கே தொடங்குங்கள்
 பள்ளி நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசுங்கள் போராட்டத்தை வெற்றிபெறச் செய்யுங்கள்.


 உங்களை நம்பி களத்தில் இறங்கி விட்டேன். இந்த பட்டினிப்போராட்டத்தின் வெற்றியும் தோல்வியும் உங்களிடமே விட்டுவிடுகிறேன். வெற்றி பெறச் செய்யுங்கள் என்று வேண்டுகின்றேன். 


நன்றியுடன் உங்கள் 
கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.