எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்.

எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்.



 .நம் வாழ்க்கை பயணத்தில் நமக்கான நல்ல மனிதர்களை நிச்சயம் இந்த பிரபஞ்சம் அறிமுகப்படுத்தும் . அப்படி என் வாழ்வில் எனக்கு கிடைத்த பரிசு ஐயா, சீனி. திருமால் முருகன் அவர்களின் நட்பு . 


நான் பார்த்து வியந்த மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவர் . அனைத்து நற்பண்புகளையும் ஒருங்கே கொண்ட மாமனிதர் .இவரின் கடைக் கண் பார்வை என் மேல் விழுந்தது என் பிறவிப் பயனே . நம் மாவட்டத்திற்கு கிடைத்த நல் முத்து. 


 உழைப்பே உயர்வு என்பதற்கு ஏற்ப தன் கடின உழைப்பால் ஊத்தங்கரையில் 
 கல்வி சாம்ராஜ்யத்தை உருவாக்கி  அனைவருக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்.


 . ஒரே மாதிரியாக யோசிப்பதை விட, வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து செயல்பட்டால், வெற்றியை நிச்சயம் அடைய முடியும்,' 'என்று அறிவுறுத்திய கல்விமான் .


“ நான் ” என்பதைவிட “ நாம் ” என்ற ஒன்றே பெரும் வெற்றியை தேடித்தரும்,"* என்று அடிக்கடி சொல்லி ஒற்றுமையை வலியுறுத்தியவர். 


எப்போதும் எளிமை ,நேர்மை, 
பழகுவதில் இனிமை ,இவையே இவரின் பண்புகள் . உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர் ,
 மனித நேயம் மிக்க 
 மா மனிதர்* .* 


 காலங்கள் மாறிப்போகலாம், உங்கள் வயதுகள் மாறிப்போகலாம், தோற்றங்கள் மாறிப் போகலாம் *
 நாட்கள்* நகர்ந்து போகலாம் ஆனால்  உங்கள் அன்பான அரவணைப்பும் , உயர்ந்த பண்புகளும் என்றும் மாறாமல் நிறைந்த அன்பையும்,பண்பையும், வற்றாத செல்வத்தையும் ,நோய்நொடி இல்லாத வாழ்வையும் ,குன்றாத இளமையும், கொடுத்து கல்வி கேள்வியில் மேலும் சிறந்து விளங்கி மனிதம் பரப்பி மனிதநேயத்தை வளர்க்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்.



 வாழ்த்தின் மகிழ்வில்..... 
Rtn.P.S.கணேசன்,
 ஸ்ரீ வினாயகா பள்ளி காவேரிப்பட்டணம்