மாநில துணைத் தலைவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....,.
என் மரியாதைக்குரிய சகோதரர்
ஆற்றல்மிக கொண்டவர்
அறிவில் சிறந்தவர் கடின உழைப்பாளி கற்றலில் மேன்மையானவர் உழைத்து உயர்ந்த உத்தமர்களில் உன்னதமானவர் நினைத்ததை முடிப்பவன்
ஆயிரத்தில் ஒருவன் ஆசிரியர்களுக்கு எல்லாம் ஆசிரியர் பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் பேணிக் காக்கும் வல்லமை மிக்கவர்
நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாது பணியாற்றும் நல்ல கல்வியாளர் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற தாரக மந்திரத்தை தலைமேல் சுமந்து தலைநிமிர்ந்து வாழும் தமிழ்குடிமகன் .
எங்கள் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஒப்பற்ற தலைவர்களில் முதன்மையானவர் பணம் வரும் போகும் பண்பு மாறாமல் பழையதை மறவாமல் பாசமும் நேசமும் நிறைந்த எங்கள் மண்ணின் மைந்தன்.
அதியமான் ஆண்ட பூமியில் ஆண்டு கொண்டிருக்கும்
வாழும் அதியமான்.
அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ஊத்தங்கரையால் உங்களுக்கு பெருமை இல்லை உங்களால் தான் ஊத்தங்கரைக்கே பெருமை என்பதை இந்த உலகம் அறியச் செய்திட்ட என் அன்பு தளபதியே....
தாங்கள் இன்னும் 100 ஆண்டுகள் அல்ல இன்னும் ஆயிரம் ஆண்டுகள் உங்கள் பெயர் சொல்லும்
உங்களை
ஈன்றெடுத்தவர்களின் பெயர் சொல்லும் வண்ணம் நீங்கள் அதியமான் பெயரில் உருவாக்கி இருக்கக்கூடிய அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிபிஎஸ்இ பள்ளி
கலை அறிவியல் கல்லூரி
ஆசிரியர் பயிற்சி கல்லூரி... என உங்கள் கல்விப் பணி நீண்டு கொண்டே சென்று ஒரு பல்கலைக்கழகமாக உருவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை ஆம்.... அது என் கனவு அதை நிறைவேற்றுவது உங்கள் கடமை நீங்கள் நிறைவேற்றுவீர்.. என்கிற அயராத நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு....
ஏனென்றால் என் நம்பிக்கை நட்சத்திரமே முனைவர். சீனி .திருமால் முருகன் எனும் ஆளுமை தான்.
இன்று உமக்கு பிறந்தநாள் இல்லை கல்விக்கு பிறந்தநாள் நீங்கள் நீடு வாழ வேண்டும் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நின் பேரும் புகழும் பெருமையும் பெற்று பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்வாங்கு வாழ உளமார வாழ்த்துகின்றேன்.
நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற இங்கே நல்லவங்க எல்லோரும் உங்க பின்னாலே நீங்க நினைத்ததெல்லாம் நடக்கும் உங்க கண்ணு முன்னாலே என்று வாழ்த்துகின்றேன் வாழ்க பல்லாண்டு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்......
என்றும் உங்கள்
கே. .ஆர் .நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.