புதிய கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளுக்கு அனுமதி இல்லை !

புதிய கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளுக்கு அனுமதி இல்லை !


மார்ச் 16 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தாக்கம் குறையாததினால் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.


இதனால் நடப்பு கல்வியாண்டு கேள்வி குறியாக உள்ளது. இதில் தற்போது உள்ள கல்லூரிகள் தொடர்ந்து செயல்படுவதற்கு சிக்கல்களை சந்திக்கும் தருணத்தில் புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதாவது ஒவ்வொரு வருடமும் புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கும், மேலும் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கும் யுஜிசியிடம் அனுமதி பெற வேண்டியது அவசியமானதாகும். அதன்படி இந்த ஆண்டும் இது போன்ற செயல்களுக்கு அனுமதி வழங்குமாறு யுஜிசியிடம் அனுமதி கேட்கப்பட்டது.


ஆனால் தற்போதைய சூழ்நிலையில் எந்த ஒரு புதிய கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளுக்கும் இந்தாண்டு அனுமதி இல்லை என யுஜிசி அறிவித்து உள்ளது.