நாட்டா தேர்வு ஒத்திவைப்பு !

நாட்டா தேர்வு ஒத்திவைப்பு !


நாடு முழுவதும் உள்ள ஆர்க்கிடெக்சர் கல்வி இளநிலை பட்டப்படிப்பில் பட்டம் பெற நாட்டா (National Aptitude Test in Architecture) எனும் தேர்வு ஓவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பி.ஆர்க் படிப்பில் சேர முடியும். தற்போது இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


நாட்டா தேர்வு ஆகஸ்ட் 29க்கு மாற்றம்:

தேசிய ஆர்கிடெக்ட் திறனறி தேர்வான, நாட்டா தேர்வின், வரையும் திறன் மற்றும் பொது திறனாய்வு தாள்களுக்கான தேர்வுகள், நேரடியாக மட்டுமின்றி, ஆன்லைனிலும் நடத்தப்பட உள்ளன. ஆகஸ்ட், 1ல் நடக்க இருந்த, வரையும் திறனுக்கான நாட்டா தேர்வு, கொரோனா தொற்று காரணமாக ஆகஸ்ட் 29க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான பாடத் திட்டங்களும் மாற்றப்பட்டுள்ளன. பொது திறனாய்வு தேர்வு தேதி விரைவில் வெளியிடப்பட உள்ளது.


தேர்வு எழுதும் மாணவர்கள், இதர தகவல்களை, www.coa.gov.in மற்றும், www.nata.in என்ற, இணையதளங்கள் வழியே தெரிந்து கொள்ளலாம்.