முதுகலை மருத்துவத் தேர்வுகள் 3 மாதம் தள்ளிவைப்பு !
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் அனைத்து மருத்தவர்களும், தீவிரமாக செய்யப்படுவதால் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெற இருந்த முதுகலை மருத்துவத் தேர்வுகள் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு அறிவித்துள்ளார்.
3 மாதம் தள்ளிவைப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பல்வேறு தேர்வுகளை மத்திய மாநில அரசுகள் ஒத்திவைத்தும் ரத்து செய்தும் வருகிறது. அதில் தற்போது முதுகலை மருத்துவ படிப்புக்கான தேர்வும் சேர்த்துள்ளது.
முதுகலை மருத்துவ படிப்புக்கான தேர்வு ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக மருத்துவர்கள் அனைவரும் தங்களது உயிரை பணையம் வைத்து செயல்பட்டு வருவதால் இந்த தேர்வை அரசு 3 மாதங்களுக்கு தள்ளிவைத்து உள்ளது.