ஆகஸ்ட் 3 இல் மாணவர் சேர்க்கை தொடக்கமா? - பள்ளிக் கல்வித் துறை விளக்கம்

ஆகஸ்ட் 3 இல் மாணவர் சேர்க்கை தொடக்கமா? - பள்ளிக் கல்வித் துறை விளக்கம்



அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளதாக, சில அரசுப் பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் இன்று நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.

 

பல்வேறு தளர்வுகள், நிபந்தனைகளுடன் தற்போது அமலில் உள்ள பொதுமுடக்கம் ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. பொது முடக்கத்தை மேலும் நீட்டிக்கும் திட்டமில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்திருந்தார். இதனால், பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து வெளியான அறிவிப்பு பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் மிகழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து வெளியான அறிவிப்பு தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது.

அதில் "அரசுப் பள்ளிகளில் ,ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என வெளியான தகவல் முற்றிலும் தவறானது. தற்போதைய சூழலில் மாணவர் சேர்க்கை நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 3 ஆம் தேதி மாணவர் சேர்க்கை என நோட்டீஸ் ஒட்டிய பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்"என்று பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.