மாணவர் சேர்க்கையில் புதிய வழிமுறைகள் – கேவிஎஸ் அறிவிப்பு
கேந்திரிய வித்யாலயா சங்கதன் பள்ளியில் வரும் 2020-2021 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் மாணவர் சேர்க்கையில் புதிய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை கேவிஎஸ் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1 வகுப்புக்கு குலுக்கல் முறையிலும், 2 முதல் 8 வகுப்பு வரை முன்னுரிமை அடிப்படையிலும், 9 ஆம் வகுப்பிற்கு நுழைவுத்தேர்வு வைத்தும், 11 ஆம் வகுப்பிற்கு 10 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இணையதளத்தில் அதற்கான முதல் சேர்க்கை பட்டியல் வெளியிடப்படும். பின்னரும் காலியிடங்கள் இருந்தால் 2 மற்றும் 3 முறையில் மாணவர் சேர்க்கை பட்டியல் வெளியிடப்படும். ஆனால் இந்தாண்டில் இதில் மேலும் புதிய வழிமுறைகள் கடைபிடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- புதிய வழிமுறைகள் :இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% வரை இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
- தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 15% வரை இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
- பழங்குடியினர் வகுப்பினருக்கு 7.5% வரை இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
- மாற்றுத்திறனாளி வகுப்பினருக்கு 3% வரை இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
இது போன்ற புதிய வழிமுறைகளினை அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ளதாகவும் அறிவித்து உள்ளது.