16ம் தேதிக்குள் பாதிக் கட்டணம் செலுத்த வேண்டும் – பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா்கள்....
சென்னையில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் ஒன்று வரும் 16ம் தேதிக்குள் 50% கட்டணம் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலில் உள்ள காலத்தில் பள்ளிகள் தங்களிடம் படிக்கும் மாணவ மாணவியர்களிடம் கல்வி கட்டணம் செலுத்த கூறி கட்டாயபடுத்த கூடாது என ஏற்கெனவே தமிழக அரசு கடந்த ஏப்ரலில் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் சென்னை மற்றும் கோவையிலுள்ள சில பள்ளிகள் தங்களிடம் பயிலும் மாணவர்களிடம் கல்வி கட்டணம் செலுத்தும்படி அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பியது. மேலும் அரசின் உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்து பேசினார்.
இந்நிலையில் சென்னையிலுள்ள தனியார் பள்ளி நிர்வாகம் ஒன்று பள்ளி கட்டணத்தில் 50% வரும் 16ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது. பள்ளி கட்டணம் ரூ.55 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நீச்சல் குளத்திற்கு கட்டணம், நூலக கட்டணம் என பல வகைகளில் கட்டணம் வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
இதனால் கட்டணத்தை குறைக்க கோரி 50க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளியில் முற்றுகையிட்டனர். எனினும் கட்டணங்களை குறைக்க முடியாது என பள்ளி நிர்வாகத்தின் தரப்பு திட்டவட்டமுடன் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து அந்த தனியார் பள்ளி நிர்வாகத்திற்கும், பெற்றோர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசின் சட்டதிட்டங்களை மதிக்காமல் இதுப்போன்று சில பொிய பள்ளிகள் செய்கின்ற தவறுகளால் ஆயிரக்கணக்கான நடுத்தர மற்றும் சிறிய பள்ளிகள் பாதிப்படைகின்றது, யாராக இருந்தாலும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் தலைக்கு மேல் பிரச்சனைகள் தலைதூக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், இது குறிப்பிட்ட ஒருசில பள்ளிகளின் பிரச்சனை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள 20,000 பள்ளிகளின் வாழ்வாதார பிரச்சனை,