ஆகஸ்ட் 16ல் கல்லூாிகள் திறப்பு.....! பள்ளிகள் திறப்பு எப்போது...?

ஆகஸ்ட் 16ல் கல்லூாிகள் திறப்பு.....! பள்ளிகள் திறப்பு எப்போது...?


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மார்ச் 16 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.


தாக்கம் குறையாததினால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்  62 ஆவது கூட்டத்தினை சமீபத்தில் நடத்தியது. அதில், செப்டம்பர் மாதத்திற்குள் கலந்தாய்வினை முடித்து விட வேண்டும் நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கும் அறிவித்து உள்ளது.


கொரோனவினால் ஜூலையில் தொடங்கும் கல்வியாண்டினை செப்டம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் கற்றல், கற்பித்தல், செயல்முறைகள் ஆகியவற்றின் மூலம் பாடங்களை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


பொறியியல் மாணவர் சேர்க்கையினை முதல் சுற்றினை ஆகஸ்ட் 30 மற்றும் 2,3 சுற்றுகளை செப் 15 குள்ளாகவும் முடித்து விட வேண்டும் எனவும், முதலாமாண்டு சேர்க்கையினை செப்டம்பரில் நடத்தவும், 2,3,4 ஆம் ஆண்டு வகுப்புகளை ஆகஸ்டு 16ல் தொடங்கவும் தற்போது திட்டமிடப்பட்டள்ளது.


பட்ட மற்றும் சான்றிதழ் படிப்புகளின் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 10 அன்றுக்குள் முடிக்கப்பட்டு வகுப்புகள் செப் 15 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.


ஆகஸட் 16 முதல் கல்லூாிகள் தொடங்கப்படுவதால் பள்ளிகள் விரைவில் தொடங்குவதற்கான வாய்ப்புகளும் அதிகாித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கான பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் எப்போது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பள்ளிகள் திறக்கப்படலாம் எனவே பள்ளி தலைமையாசிாியா்கள் தங்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யாமல் வைத்து்ககொள்ளும் படி கல்வித்துைற அதிகாாிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனா், எனவே விரைவில் பள்ளிகள் திறப்பதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது.