தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2020 – வெளியாகும் தேதி அறிவிப்பு
அரசு தேர்வு இயக்குநரகம்11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதியை அறிவித்துள்ளது. மாணவர்கள் DGE வலைத்தளம் மூலம் தேர்வு முடிவுகளை சரிபார்த்து கொள்ளலாம்.
நாளை மறுநாள் தேர்வு முடிவுகள்:
மார்ச் மாதம் நடைபெற்ற 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என அரசு தேர்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. ஜூலை 31 ஆம் தேதி இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைபேசி வாயிலாக குறுஞ்செய்தி மூலம் முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் எனவும் விடுபட்ட 12ஆம் வகுப்பு மறு தேர்வு முடிவுகளும் ஜூலை 31 ஆம் தேதி வெளிவரும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் dge.tn.gov.in, tnresults.nic.in இல் தங்களது தேர்வு முடிவுகளை சரிபார்த்து கொள்ளலாம்.