உாிமைகளை மீட்டெடுப்போம்.....! 10ஆம் தேதி போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம்  வாருங்கள்......!!

உாிமைகளை மீட்டெடுப்போம்.....! 10ஆம் தேதி போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம்  வாருங்கள்......!!



மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் Dr. K. R. நந்தகுமாரின் இனிய காலை வணக்கம்.


நமது சங்கத்தின் சார்பில் நடைபெறும் மாபெரும் பட்டினிப்போராட்டம் மாநிலம் முழுக்க கல்வித்துறையை மட்டுமல்ல அனைத்து துறைகளும் கண்ணோக்கி பார்க்க வைத்துள்ளது.


நமது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுகிறது. நமது உரிமைகள் நமக்கு கிடைக்க வேண்டுமானால் .... இந்த அறப்போராட்டத்தை விட  அரசின் கவனத்தை ஈர்க்க வேறு வழியில்லை.


இந்த போராட்டத்தில் 100% அனைத்து பள்ளி ஆசிரியர்களும் ஆசிரியரல்லாத ஊழியர்களும் ஓட்டுனர்களும் உதவியாளர்களும் தவறாமல் கலந்து கொண்டு வெற்றி பெறச் செய்யுங்கள்.


நமது சங்கத்தின் தொடர் கோரிக்கைகளின் காரணமாக நீதிமன்ற வழக்குகளின் காரணமாக....


தனியார் பள்ளிகள் இணைய வழியாக தொடர் கல்வி கற்பித்தலை தடை செய்ய முடியவில்லை.


பள்ளி வாகனங்களுக்கான வரி அபராதத்துடன் கட்ட வேண்டும் என்பதற்கு தடை போட்டு இருக்கிறோம்.


பள்ளி திறக்காத போது பாடம் நடக்காதபோது பாடப் புத்தகங்களை வாங்கு என்று சொன்னபோது நமது சங்கம் மட்டுமே அரசு பாடப் புத்தகங்களை வாங்காதே பாடப் பகுதிகள் 50% குறைகிறது....என  அரசின் பாட புத்தகங்கள் ..
வாங்காமல் தடுத்து நிறுத்தி வைத்து உங்களுக்கான பணத்தை மிச்சப்படுத்தி இருக்கின்றோம்.


கல்விக்கட்டணம் வாங்கக் கூடாது என்கிற போது அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காடி.... பெரும்பாலான பள்ளிகள் கல்வி கட்டணத்தை வசூலித்து வருகின்றன... இவ்வாரம் நல்லதொரு தீர்ப்புக்காக நாம் அனைவரும் காத்திருக்கின்றோம்.


நமது சங்கம் போட்டுள்ள வழக்கின் காரணமாக ஆர்.டி.இ. கல்வி கட்டண பாக்கியை உடனே கொடுத்துவிட்டு வா... என்று நீதிமன்றத்தை சொல்ல வைத்திருக்கின்றோம்.


+1 குருப் புதிய பர்மிஷன் வாங்க வேண்டும் எனும் அரசாணையை ரத்து செய்து பழைய படியே புதிய அரசாணையை போட வைத்துள்ளோம்.


ஆன்லைன் வகுப்புகள் தனியார் பள்ளிகள் நடத்தக்கூடாது என்று சொன்ன மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமது கோரிக்கையை ஏற்று அடுத்த அரைமணிநேரத்தில் தனியார் பள்ளிகள் இணையதள வகுப்புகள் நடத்துவதற்கு தடை இல்லை என்று சொல்ல வைத்த சங்கம்.


5க்கும் 8க்கும் அரசு பொதுத்தேர்வு என்று அறிவித்தபோது வேண்டாம் என்று நமது எதிர்ப்பை பதிவு செய்து  ரத்து செய்ய வைத்த சங்கம்....


நிலப் பற்றாக்குறை உள்ள 1200 மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளிகளுக்கு இருக்கிற இடத்திலேயே பள்ளிகளை நடத்திக்கொள்ள அரசாணைறயையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தந்த சங்கம்


லஞ்சம் ஊழலை தவிர்க்க ஆன்லைன் அங்கீகாரத்திற்கான அரசாணையை பெற்றுள்ள சங்கம்.


தனியார் பள்ளிகளுகாகவே தனியாகவே சுயநிதி பள்ளிகள் இயக்குனரகத்தை உருவாக்க அரசாணை பெற்றுள்ள சங்கம்.


13 ஆண்டுகளாக மாற்றாமல் இருந்த 1 முதல் 12ம் வகுப்பு வரை காண பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க முதல் குரல் கொடுத்து மாற்றி அமைத்திட்ட சங்கம்.


தேர்வுத் துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்த சங்கம்.


பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு காலாண்டு அரையாண்டு விடைத்தாள் தர வேண்டும் என்கிற போது அதற்கு எதிராக குரல் கொடுத்து விடைத்தாளை கொடுக்காமல் ஆல் பாஸ் போட வைத்த சங்கம்.


ஆர் டி இ கல்வி கட்டண பாக்கியை ஆண்டுதோறும் அனைவருக்கும் பெற்றுத்தந்த சங்கம்.


நர்சரி பிரைமரி பள்ளிகளை தரம் உயர்த்த அரசிடம் பரிந்துரைகளை தந்து நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்போகும் சங்கம்.


பள்ளி வாகனங்களுக்கான சாலை வரி இருக்கை வரியை ரூபாய்36000 கட்ட வேண்டும் என்பதற்கு எதிராக போராடி உச்சநீதிமன்றம் வரை சென்று உரிய நீதி பெற்று வந்து அரசோடு பேசி காலாண்டு வரியாக ஒரு இருக்கைக்கு ரூபாய் 50 ஆக குறைத்த சங்கம்.



சொத்துவரி தொழில்வரி ஈ.எஸ்.ஐ இதுவரை கட்டாமல் பாதுகாத்து பள்ளி நிர்வாகிகளுக்கு பல லட்சங்களை மிச்சப்படுத்திய சங்கம்.


அனைத்து பள்ளிகளுக்கும் நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தர தனியார் பள்ளிகளை நசுக்க அரசு போடும் அனைத்து சட்டங்களையும் தூள் தூளாக்கி தனியார் பள்ளிகளின் சொத்துக்களையும் உரிமைகளையும் பாதுகாத்து தரமான கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் உன்னதமான சங்கத்தின் உயிரோட்டமான போராட்டங்கள் என்றைக்கும் வெற்றி பெறும். அதற்கு நீங்கள் அத்தனை பேரும் ஒத்துழைக்க வேண்டும்.


*இந்தக் கொடிய கொரோனா நோய்த்தொற்று காலத்தில் தனியார் பள்ளிகளை ஒழித்துவிட்டு நாமும் நமது பிள்ளைகளையும் உயர்ந்த விடாமல் தடுக்கப்படும் தடைக்கற்களை 
தூள் தூளாக்கிட... உங்களுக்கான உரிமைகளை கோரிக்கைகளை வென்றெடுக்க நடைபெறும் இந்த அறப்போராட்டத்தில் உண்மையான பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் ஆயாக்கள் ஓட்டுனர்கள் நடத்துனர்கள் அத்தனைபேரையும் தவறாமல் பங்கேற்க செய்ய வேண்டும்*.


அரசும் அதிகாரிகளும் நம்மோடு இருக்கும்போது நமது கோரிக்கைகளை நமது முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அதில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் அதற்கான போராட்டத்தில் பங்கெடுத்து அதை உங்கள் செல்போனில் Zoom App மூலம் படம்பிடித்து நாம் அனுப்பும் லிங்க் மூலம் வாட்ஸ்அப்  ஃபேஸ்புக் யூ.டியூப் ...தேசத்தின் நம்பிக்கை மற்றும் உள்ள அனைத்து தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்பு செய்ய காத்து இருக்கிறார்கள். 


இந்த அறிய தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி நமது உரிமைகளை மீட்டெடுக்க நாம் இப்பொழுது ஒன்று சேரவில்லை என்றால் எப்பொழுதும் ஒன்று சேர முடியாது என்பதை உணர்ந்து ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளும் இது உங்களுக்கான போராட்டம் உங்கள் உரிமைக்கான போராட்டம் என்பதை மனதில் நிறுத்தி ஒத்துழைப்பு தாருங்கள் என்று அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன். 


என்றும் உங்கள் நலம் நாடும்


கே ஆர் நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.