10 ஆம் வகுப்பு தேர்வில் 91.46 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி !
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் அவர்கள், ஜூலை 15 ம் தேதி 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என நேற்று தனது ட்வீட்ரர் பக்கத்தில் தெரிவித்தார். அதன்படி, இன்று தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ இணைய தளத்தில் வெளியானது. அதில் 91.46 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு மொத்தம் 18,85,885 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர், அதில் 17,13,121 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 91.46 சதவீத மாணவர்கள் 10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 0.36% அதிகம். 2019 ஆம் ஆண்டில் மொத்தம் 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிட தக்கது.
திருவனந்தபுரத்தில் மீண்டும் 99.28 தேர்ச்சி சதவீதத்துடன் முதலிடமும், சென்னை 98.95 தேர்ச்சி சதவீதத்துடன் இரண்டாம் இடமும், பெங்களூரு 98.23 தேர்ச்சி சதவீதத்துடன் மூன்றாம் இடமும் பெற்றுள்ளது.
- மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 93.31,
- மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 90.14
- திருநங்கைகளின் தேர்ச்சி சதவீதம் 78.95