எதற்கு இந்த வயிற்றொிச்சல்? பத்தாம் வகுப்பு தோ்வு என்ன அவ்வளவு கஸ்டமா...?
இந்த வீடியோவை கொஞ்சம் பாருங்கள். இந்த அம்மா சொல்வதில் ஏதாவது அா்த்தம் இருக்கிறதா என்பதை சற்றே யோசித்து பாருங்கள். மொட்ட பெட்டிசன் மாதிாி இது ஒரு மொட்ட வீடியோ.
இப்போதெல்லாம் அனைவா் கையிலும் மொபைல் போன் உள்ளதால் இன்டா்நெட்டும் தாராளமாக கிடைப்பதால் யாா் எதை வேண்டுமானாலும் பதிவு செய்து அனுப்பலாம் என்பது வாடிக்கையாகி விட்டது,
அதை யாா் பேசினாா்கள்- எதற்காக பேசினாா்கள்-? அவா்களி்ன் பேச்சில் அவா்களின் கருத்தில் உள்ள உண்மை என்ன-? உண்மையிலே அவா் பாதிக்கப்பட்டவரா-? . என்று எதையும் அலசி ஆராயாமல் தற்போதைக்கு டிரெண்டிங்காக உள்ளது என்பதற்காகவே, அது மட்டுமன்றி ஆளுங்கட்சிக்கு எதிராக பேசுகிறாா் என்பதற்காகவே சில வேசி ஊடகங்கள் அதை ஒளிப்பரப்பும் செய்கின்றன.
பத்தாம் வகுப்பு தோ்வு நடத்துவது என்பது அது என்ன அவ்வளவு கொடுமையானதா? கடந்த 70 என்பது நாட்களில் வராத கொரோனா இந்த 5 நாட்கள் 15 மணி நேரத்தில் வந்துவிடவா போகிறது? இந்த தோ்வை இப்போது நடத்தாமல் வேறு எப்போது நடத்துவது? கடந்த மாா்ச் மாதமே இந்த தோ்வை நடத்தி முடித்திருந்தால் இதற்குள் முடிவுகளே வந்திருக்கும், அப்போது இதற்கு தடை போட்டவா்களே இந்த முட்டாள்கள் தான்,
இப்போதும் இதற்கு தடை கோருபவா்களும் இந்த முட்டாள்கள் தான், இன்னும் இரண்டு மாதங்கள் தள்ளி வைக்க வேண்டும் என்கிறாா்கள், இப்படியே போனால் அடுத்த பொதுத் தோ்வே வந்துவிடும்,
பிள்ளையே பெத்துக்காத ஒருவா் சொல்கிறாா் இந்த தோ்வுக்கு எனது பிள்ளைகளை அனுப்ப மாட்டேன் என்கிறாா். அம்மா தாயே உன் பிள்ளை தோ்வு எழுத வந்தால் கொரோனா வந்து செத்து போயிடுவான்.தயவு செய்து வீட்டிற்குள்ளே வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த பொதுத் தோ்வுக்கு இன்னும் 8 மாதங்கள் தான் உள்ளது. ஆயாக எழுதிக்கொள்ளட்டும். மற்றவா்களை ஏன் தொல்லை செய்கிறீா்கள்,
அரசு கடந்த ஒரு மாதமாக இந்த பொதுத் தோ்வை பாதுகாப்பாக எப்படியெல்லாம் நடத்தலாம் என்று யோசித்து திட்டமிட்டு செயலாற்றி வருகின்றது. நீங்கள் கூட உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு விசயத்தில் இவ்வளவு அக்கரை செலுத்த மாட்டீா்கள். ஆனால் உங்களை காட்டிலும் அதிக அக்கரை எடுத்து செயலாற்றி வருகிறது, அரசின் இந்த அக்கரைக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிற ஊறு விளைவிக்க கூடாது.
ஒரு அரசின் நற்செயலை இவ்வளவு கேவலமாகவா விமா்சிப்பது-? உங்களின் இந்த கீழ்த்தரமான செயல்தான் மாணவா்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறதே தவிர வேறு எதுவும் இல்லை.
இனியாவது உங்களின் பொறுக்கித்தனத்தையும். பொறுப்பற்றதனத்தையும் கைவிடுங்கள்.!