இணைந்து பணியாற்றுவோம்..!  இன்னல்களை வெல்வோம்....!!  பொதுச் செயலாளா் வேண்டுகோள்....!!!

இணைந்து பணியாற்றுவோம்..!  இன்னல்களை வெல்வோம்....!!  பொதுச் செயலாளா் வேண்டுகோள்....!!!


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சிங்கங்களாக விளங்கும் அன்புத் தலைவர்கள் அனைவருக்கும் 
இனிய காலை வணக்கம்.


முக்கியமான சில விஷயங்கள் குறித்து உங்களோடு மனம் திறந்து பேசுகிறேன்.


இந்த இக்கட்டான காலகட்டத்தில் நாம் அரசுக்கு தொடர்ந்து நாள்தோறும் கோரிக்கை மனுக்களை அனுப்பி வருகிறோம். அதில் எத்தனை மனுக்களை முதல்வரும் அமைச்சரும் இயக்குனர்களும் பார்ப்பார்கள் செய்வார்கள் என்று தெரியவில்லை.


ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் சில சமூக விரோத அமைப்புகளும் நமக்கு எதிராக பல்வேறு திட்டங்களைத் தீட்டி சதிகள் செய்து தனியார் பள்ளி நிர்வாகிகளை குற்றவாளிகளைப் போல் தீவிரவாதிகளை போல் மக்கள் மன்றத்தில் முன்வைக்கிறார்கள். 


நாம் அதற்கெல்லாம் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் பணியாற்றினாலும் நான் ஒருவனாக இருந்து ஒன்றும் செய்யமுடியாமல் தத்தளிக்கிறேன்.


 நமது நண்பர்கள் அனைவரும் வாய்ச்சொல் வீரராக மட்டுமே இருக்கிறார்கள். அடுத்து வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அதை ஒட்டித்தான் எல்லோரும் பணியாற்றுவார்கள்.


இனி நமக்கு வேண்டியதை நாம் தான் தர வேண்டும். அதற்காக நமது பள்ளி நிர்வாகிகளை நம்பி தெருவில் இறங்கி போராட முடியாது. 


அதற்கு பதில் நீதிமன்றத்தில் நமக்கான நீதிக்கான போராட்டத்தை முன் வைத்து நமது கோரிக்கைகளில் வெற்றி பெற்றாக வேண்டும்.


நாம் அரசுக்கு அனுப்பிய கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்காடுவது என்று முடிவெடுத்து இருக்கின்றோம்.


குறிப்பாக பள்ளிகளை திறந்தால் நம்மால் ஒரு நாள் பொழுது கூட நிம்மதியாக இருக்க முடியாத சூழல் உள்ளதை நீங்கள் அனைவரும் உணர வேண்டும்.


சொத்து வரி நிலவரி நீர்வரி தொழில் வரி இ.எஸ்.ஐ .பி.எப். கட்ட வேண்டும்.
பள்ளி வாகனங்களுக்கான எஃப். சி. செய்ய வேண்டும் அதற்கு சாலை வரி இருக்கைவரி
இன்சூரன்ஸ் கட்ட வேண்டும். பள்ளி வாகனங்களை டிங்கரிங் இஞ்சின் ஆயில் சர்வீஸ் பெயிண்டிங் என்று ஒரு பெரும் செலவு இருக்கிறது. அதுமட்டுமல்ல பழைய வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருந்தாது புதிதாக அவர்கள் சொல்லும் இடத்தில்தான் ஜி. பி. ஆர். எஸ். கருவி சி.சி.டி.வி. கேமரா வாங்கி பொறுத்த வேண்டும்.
மேற்கண்டவற்றை பொருத்தாமல் இருக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளோம்.


பணம் செலவழித்துத்தான் வழக்கில் வெற்றி பெற வேண்டும். அதேபோல் ஆர். டி. இ. கல்வி கட்டண பாக்கி இவர்கள் தருவதாக தெரியவில்லை. அதற்காக ஒரு வழக்கும் ஆர்.டி.இ. கல்வி கட்டணத்தை உயர்த்தி வழங்க கோரி இன்னொரு வழக்கும் அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகளான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க கோரியும் ஒரு வழக்கும் போட்டுள்ளோம். 


தற்போது கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது மாணவர்கள் சேர்க்கை செய்யக்கூடாது என்று போட்டுள்ள உத்தரவுக்கு எதிராக பழைய புதிய கல்வி கட்டணம் வசூலிக்கவும் மாணவர்கள் சேர்க்கையை செய்யவும் புதிதாக ஒரு வழக்கு போட வேண்டும். நிலுவையிலுள்ள சொத்துவரி கேட்டு ஜப்தி செய்யக்கூடாது பழைய புதிய இ.எஸ். ஐ கேட்கக் கூடாது என்பதற்கான வழக்கை உச்சநீதிமன்றத்தில் நடத்தி முடித்தாக வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக தொடர் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளின் பட்டியலை அரசு பத்திரிகைகள் போட்டு அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை செய்யக்கூடாது என்றும் அங்கீகாரம் பெற டிடிசிபி எழுப்பிய சிஎம்டிஏ அனுமதி வேண்டுமென்றும் நிர்ப்பந்திப்பார்கள்.பிளஸ் 1 மாணவர் சேர்க்கை குரூப் பர்மிஷன் வேண்டும் என்கிறார்கள். அங்கீகாரம் இருந்தால்தான் குரூப் பர்மிஷன் கொடுப்போம் என்கிறார்கள்.


இவ்வளவு பிரச்சனைகள் எல்லாம் நம் கண் முன்னால் உள்ளது..... தலைவர்களெல்லாம் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை என்றால் நான் என்ன செய்யமுடியும்.


 எனவே தயவு செய்து நிலைமையை உணர்ந்து ஒவ்வொரு தலைவரும் உங்களுக்கு அருகில் உள்ள பள்ளி நிர்வாகிகளை கைபேசியில் நேரில் சந்தித்து பேசி சங்க சந்தாவையோ வழக்கு நீதியையோ உங்களால் முடிந்த மட்டும் வசூலித்து தந்தால் மட்டும் தான் இவ்வளவு பிரச்சனையில் இருந்து மீள முடியும் வெறும் வாய்ச்சொல் வீரராக நாம் இனியும் இருந்துவிட முடியாது.


நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக வேண்டும் என்று நாம் நாள் தோறும் போராடுகின்றோம். ஆனால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதை தடுத்தே ஆக வேண்டும் என்று ஒரு பக்கம் நமக்கு எதிரான சதிகளை செய்து வருகிறார்கள்.


என்ன செய்யப்போகிறோம் உடனே கவனியுங்கள் உங்கள் திறமையைக் காட்டுங்கள் நீங்கள் ஆளுக்கு ஐந்து பேரை சந்தித்து பேசினால் கூட இந்த பிரச்சனை தீர்ந்து விடும். சங்கத்தின் சூப்பர் ஸ்டாராக உள்ள நீங்கள் ** நமது சங்கத்தின் நாடி நரம்புகள் ரத்த ஓட்டம் இதயமாக உள்ள நீங்கள் ஒவ்வொருவரும் நினைத்தால் எல்லாம் நடக்கும் நடத்திக் காட்டுங்கள்.


இன்னும் ஒரு வார காலத்திற்குள் இந்த கடமையை நீங்கள் செய்து உங்கள் மாவட்டத்திலிருந்து ஒரு பெரும் தொகையை நீதியை நிலைநாட்ட நிதியாக தாருங்கள் என்று அன்போடு வேண்டுகின்றேன். 


பலமுறை பல வழிகளில் சொல்லி பார்த்து விட்டேன். கடைசியாக கேட்கிறேன்.
காரியம் ஆற்றுங்கள் அனைவரின் கனவுகளையும் நனவாக்குவோம். நம்மையும் நமது சொத்துக்களையும் பாதுகாத்துக்கொள்ள நாம் அனைவரும் இணைந்து பணியாற்றினால் தான் இந்த இக்கட்டான காலகட்டத்தில் வெற்றிகொள்ள முடியும்.... என்பதை உணர்ந்து செயலாற்றுங்கள் என்று அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறேன். 


நன்றி வணக்கம் உங்கள்
 கே.ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.