பொதுத் தோ்வு மையங்கள் எப்படி இருக்க வேண்டும்.... அரசின் அறிவுரைகள்.....

பொதுத் தோ்வு மையங்கள் எப்படி இருக்க வேண்டும்.... அரசின் அறிவுரைகள்.....


அன்பார்ந்த தலைமை ஆசிரியர்களே/‌முதல்வர்களே


 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 15- 6- 2020 முதல் தொடங்க இருக்கிறது. இரண்டு மாதங்களுக்குப் பின் பள்ளி திறக்கப்பட இருப்பதால் நாம் செய்ய வேண்டிய அத்தியாவசிய பணிகள் இருக்கின்றன.


1) அனைத்துப் பள்ளிகளும் தேர்வு மையங்களாக செயல்பட உள்ளதால்
 பள்ளி வளாகம்  வகுப்பறைகள் ,
மேஜைகள் மற்றும் பெஞ்சுகள்  ஆகியவை தூய்மை செய்யப்படவேண்டும்.


2) குடிநீர் தொட்டி மற்றும் கழிவறைகள் தூய்மை செய்யப்பட வேண்டும்.


3) நகராட்சிஆணையர்  , பேரூராட்சி செயலர்    ஊராட்சி ஒன்றிய ஆணையரை  தொடர்பு கொண்டு கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்த ஏற்பாடு செய்யவேண்டும்.


4) பள்ளிகளில் தூய்மை பணி நடைபெறுவதை ஆவணப்படுத்தி முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
.மேலும் இப்பணியை ஆய்வு செய்ய  
 5 -6- 2020 முதல் 
தலைமை ஆசிரியர் தலைமையில் ஒரு குழு தங்கள் பள்ளிக்கு வருகை தர உள்ளனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


 5) பொதுப் போக்குவரத்து  மண்டலங்களுக்கிடையே நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதால். 
 தங்கள் பள்ளியைச் சேர்ந்த
அனைத்து ஆசிரியர்களும்  தேர்வு பணிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்.


6) தங்கள் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் அனைவரும் உள்ளூரில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
 வேறு மாவட்டத்தில் மாணவர்கள் இருப்பார்கள் எனில் அவர்களை தொடர்பு கொண்டு 
நம் மாவட்டத்திற்கு வருகை தருவதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.


7)  மாணவர்களுக்கு நுழைவுச்சீட்டு                         
(hall ticket ) download செய்து சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர்களை வரவழைத்து அவர்களிடம்  ஒப்படைக்க வேண்டும்.


8) மாணவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும்.


9) 11. 6 .2020 முதல் விடுதிகள் திறக்கப்பட இருப்பதால்
 தங்கள் பள்ளியை சேர்ந்த  விடுதியில் தங்கி இருக்கும்  மாணவர்களை தொடர்பு கொண்டு விடுதிக்கு வரும் படியும் அவர்கள் விடுதிகளில் தங்கி இருப்பதை உறுதி செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


10) பள்ளிக்கல்வித் துறையிலிருந்து முகக் கவசங்கள் வழங்கப்பட உள்ளது. தலைமையாசிரியர்கள் அவற்றைப் பெற்று மாணவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.