உங்கள் பிரச்சனைகளை கோாிக்கை மனுக்களாக தமிழக முதல்வருக்கு அனுப்புங்கள்
நமது சங்கத்தின் கோரிக்கை மனுக்களை நாள்தோறும் நான் மட்டுமே முதல்வர் பள்ளிக்கல்வி அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறோம் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் ஒரு லட்சம் கோரிக்கை மனுக்களை அனுப்பச் சொன்னோம் ஓராயிரம் மனுக்கள் கூட சென்று சேரவில்லை.
நாம் இப்பொழுது தெருவில் இறங்கி போராட முடியாது கூட்டம்குறைந்தபட்சம் கோரிக்கை மனுக்கள் ஆவது சென்று சேர வேண்டாம் அதுவும் இமெயில் அனுப்ப முடியாதா குறைந்தபட்சம் ஐந்து ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி கூட அனுப்ப முடியாதா உங்கள் கோரிக்கையை உங்கள் உரிமையை உங்கள் சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்ள உங்களால் ஐந்து ரூபாய்ஸ்டாம்ப் ஒட்டி கோரிக்கை மனுவை அனுப்ப முடியாதா...?
இனியாவது தயவுசெய்து சிந்தித்து காலம் தாழ்த்தாமல் நமது சங்கம் அனுப்பியுள்ள கோரிக்கை மனுக்களை நாள்தோறும்தவறாமல் உங்கள் அத்தனை பிரச்சனைகளும் தொகுத்து எழுதி உங்கள் பள்ளி லெட்டர் பேடில் முதல்வருக்கும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கும் இயக்குனர்களுக்கும் செயலாளருக்கும் ஆணையாளருக்கும் தவறாமல் அனுப்புங்கள் ஒவ்வொரு கோரிக்கை மனுவில் சங்கத்தின் பெயர் இருக்கட்டும் உங்கள் பள்ளியின் பெயர் மற்றும் உங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணருங்கள்.
உங்களால் நூற்றுக்கணக்கான பள்ளி நிர்வாகிகளை ஒன்றுசேர்த்து மனுக்களை அனுப்பச் செய்யுங்கள் புனித ஜார்ஜ் கோட்டையில் நமது கோரிக்கை மனுக்களும் கோரிக்கைகள் நிறைவேறும் நீங்கள் இப்பொழுது தூங்கினால் எப்பொழுதும் வெற்றி பெற முடியாது என்பதை உணருங்கள்.
இப்பொழுதே உங்கள் எழுதுகோலை எடுங்கள் எழுதத் துவங்குங்கள் வெற்றி உங்களுக்கே
என்றும் உங்கள்
கேஆர்.நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.