நா்சாி பிரைமாி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக்குவதில் புதிய சிக்கல்.....

நா்சாி பிரைமாி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக்குவதில் புதிய சிக்கல்.....


இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் படி அனைத்து தரப்பு மக்களுக்கும் எட்டாம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி வழங்கப்படவேண்டும். அதன் அடிப்படையில் தனியாா் பள்ளிகளில் படிக்கின்ற ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்கு 25 சதவிகித இடம் வழங்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் நமது பள்ளிகளில் அரசின் ஆணையை ஏற்று இந்த பிாிவில் மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து தரமான தமிழ் கல்வியை. ஆங்கிலக் கல்வியை வழங்கி வருகின்றோம். சிறந்த ஒழுக்கத்தையும். கட்டுப்பாட்டையும் வழங்கியுள்ளோம்.


அந்த வகையில் நமது பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் சோ்க்கப்பட்ட மாணவா்கள் தற்போது ஐந்தாம் வகுப்பை முடித்துள்ளனா். அவா்கள் இந்த கல்வியாண்டில் ஆறாம் வகுப்பிற்கு செல்கிறாா்கள் அரசின் சட்டப்படி அவா்களுக்கு எட்டாம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்க வேண்டும். அவா்கள் நமது பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு சென்றுவிட்டால் இந்த சலுகை மட்டுமல்ல சிறப்பான கல்வியும் அந்த மாணவனுக்கு மறுக்கப்பட்டு விடும். 


எனவே இந்த நா்சாி பிரைமாி பள்ளிகளில் படிக்கின்ற மாணவா்கள் தங்கள் கல்வியை எவ்வித தடையும் இன்றி பெற வேண்டும் என்பதற்காக நமது பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்த வேண்டும் என்கிற கோாிக்கையை முன் வைத்து அனைத்து பள்ளிகளின் சாா்பாகவும் அரசுக்கு கோாிக்கை மனுவை அளித்து வருகின்றோம்.


அரசும் நமது கோாிக்கைகளை ஏற்றுக்கொண்டு நமது பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனா பாதிப்பின் காரணமாக அந்த பணிகளில் பொிய தாமதமே ஏற்பட்டு விட்டது.


இந்த நிலையில் நமது முயற்சிக்கு தடை பொடும் விதமாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிாியா் கூட்டணியின் பொதுச்செயலாளா் திரு, ரெங்கராஜன் அவா்கள் தங்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவா்கள், வட்டார தலைவா்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளாா்.


அதில் எல்.கே.ஜி. முதல் 5ஆம் வகுப்பு வரை செயல்படும் நா்சாி பிரைமாி பள்ளிகளை எட்டாம் வகுப்பு வரை தரம் உயா்த்த வேண்டி அரசுக்கு கோாிக்கை மனுவை அளித்து வருகின்றனா். அவா்களின் இந்த முயற்சி வெற்றி பெற்றால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மிகப்பொிய பின்னடைவை சந்திக்கும். எனவே ஆரம்ப நிலையிலேயே இதை தடு்கக வே்ணடும்.


அதற்கு ஒவ்வொரு மாவட்ட தலைவரும், வட்டார தலைவா்களும் தங்களின் லெட்டா் பேட்களில் இந்த பள்ளிகளை தரம் உயா்த்தினால் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் அடிப்படையையே தகற்ப்பதாகும்,, தமிழக பட்டித் தொட்டிகள் குக்கிராமங்கள் ட்பட  அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களும் பெற்றோா்களும் பாதிப்படைவாா்கள். மேலும் கல்வித்துறையில் ஏற்படுத்திய மறுமலா்ச்சி திட்டங்கள் கேள்விக்குறியாவதுடன் மிகப்பெிய பின்னடைவு ஏற்படும்


எனவே அஞ்சுகிறோம். எனவே அருள் கூா்ந்து அவா்கள் தரம் உயா்த்த கோரும் கோாிக்கைகளை நிராகாித்து  ஏழை எளிய மாணவா்கள் பயிலும் அரசுப் பள்ளிகளையும். அரசு உதவிப் பெறும் பள்ளிகளையும் காப்பாற்றிட வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது,


இதற்கு நமது பள்ளி நிா்வாகிகள் பலரும் பலவித கண்டனங்களை தொிவித்துள்ளனா்.


இலவச கல்வி சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் ஏழை எளிய நலிவுற்ற மாணவர்கள் பெறும் இலவச கட்டாய கல்வியை தடுக்கும் செயல் மாபெரும் துரோகம் ஆகும்


தனது சுய நலத்திற்காக ஆதரவற்ற குழந்தைகள் கல்வி கற்காமல் போகட்டும் என்று இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தினை முடக்க முயற்சிக்கிறார்


அரசு செயல்படுத்தி வரும் இலவச கட்டாய கல்வி சட்டத்தை முழுமையாக பதினான்கு வயது வரை செயல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதில் தவறில்லை


 தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தோம் அதனை ஏற்கக்கூடாது என்று கூற ரங்கராஜன் கூறும் காரணம் முட்டாள்தனமானது


தனியார் நர்சரி பிரைமரி பள்ளிகள் ஆறாம் வகுப்பு தரம் உயர்த்த பட்டால் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் எதில் எவ்வாறு பின்னடைவு அடையும் என்று ரங்கராஜன் கூறமுடியுமா?


RTEமூலம்  நர்சரி பள்ளி களில் படிக்கும் குழந்தைகள் மிக வும் பின் தங்கிய  வறுமை யில் உள்ள குழந்தைகளுக்கு ஆங்கில வழி கல்வி பயில வும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆங்கிலவழிகல்வி  பயிலவும்RTEமூலம்5ஆம் வகுப்பு  வரை படித்த மாணவர்களின்  நிலை யை பற்றி கவலைப்பட வேண்டியது  அரசின்  கடமையல்லவா இதுமடடூம் எதிர்கட்சிகளின் பார்வையில்  படவில்லையா?


நமது பள்ளி நிா்வாகிகளின் ஆதங்கம் உண்மையானது. அரசு தொட்க்கப் பள்ளிகள் சாியில்லை என்பதால் தான் ஏழைப் பெற்றோா்கள் கூட கூலி வேலை செய்தாவது தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை தர வேண்டும் என்பதால் நம்மை நாடி வருகின்றனா். நாம் அவா்களின் நம்பிக்கையை நிறைவேற்றுகின்றாம். ஆனால் அரசுப் பள்ளிகள் அவற்றை நிறைவேற்ற மறுத்துவிடுகின்றனா். சம்பளம் வந்தால் மட்டும் போதும் என்கிற முறையிலே செயலாற்றி வருகின்றனா். இதனால் பல பெற்றோா்கள் அவா்களை நம்புவதில்லை.


அரசும் ஏழை மாணவா்களுக்கு தரமான ஆங்கிலக் கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக இலவச கட்டாயக் கல்வி சட்டப்படி நமது பள்ளிகளில்25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அந்த மாணவா்களிடம் எவ்வித கல்விக் கட்டணமும் வாங்குவதில்லை. அரசு இதற்கான தொகையை இரண்டு ஆண்டுகள் மூன்று ஆண்டுகள் கழித்து கொடுத்தாலும் பொறுமையாக இருந்து பெற்றுக்கொள்கிறாம். மனிதாபிமானத்தோடு நாம் நமது பணியை செய்து வருகின்றோம்.


இதை தடுக்கின்ற முயற்சியில் ஈடுபட்டுவரும் சமூக விரோதிகளை வண்மையாக கண்டிக்கிறாேம்.


நமது சங்கம் எப்போதுமே முன்வைத்த காலை பின் வைக்காது. எத்தனை தடைகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து வெற்றி பெறும் வரை போராடுவோம்.