பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு !? – அமைச்சர் அறிவிப்பு...!

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு !? – அமைச்சர் அறிவிப்பு...!


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனால் ஊரடங்கு அமலில் இருக்கிறது. எனவே கல்லூரி முதற்கொண்டு அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தொற்றின் தாக்கம் குறையாததினால் தேர்வுகள் எல்லாம் தள்ளி வைக்கப்படும், ரத்து செய்ய பட்டும் வருகின்றது.


இந்நிலையில் தமிழகத்தில் கடந்த வாரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்பிற்கான தேர்வுகள் ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் பணி நடந்து கொண்டுள்ளது.



ஊரடங்கிற்கு முன்னரே தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றதால் அந்த தேர்விற்கு எந்த பாதிப்பும் இல்லை எனினும் கடைசி தேர்வினை மட்டும் தமிழகத்தில் 34,872 மாணவர்கள் எழுத முடியவில்லை. இதனால் அவர்களுக்கான மாற்று ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பதாவது,


தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் தேர்வு மதிப்பெண்கள் வழங்கும் பணி 70 % முடிவடைந்து விட்டது. விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும். அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு ஏற்றவாறு தேர்வு முடிவுகள் வெளியாகும்.



தமிழகத்தில் 12 ஆம் வகுப்பிற்கான கடைசி தேர்வினை 34,872 மாணவர்கள் எழுதவில்லை என்பதால் அவர்களுக்கு மறு தேர்வு நடத்துவது குறித்து அவர்களின் பெற்றோர்களிடம் கடிதம் மூலம் கருத்து கேட்கப்படும். வரும் 25 ஆம் தேதிக்குள் கருத்துக்கள் கேட்கப்பட்டு அதற்கேற்ப முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.