தமிழக அரசின் e-learn இணையதளத்தை மாணவர்கள், ஆசிரியர்கள் எளிமையாக பயன்படுத்துவது எப்படி?
கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன, பொிய பொிய தனியாா் பள்ளிகள் அனைத்தும் பெற்றோா்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காக ஆன் லைன் வகுப்புகளை நடத்த துவங்கி விட்டனா். இது மாணவா்கள் பெற்றோா்கள் மத்தியில் பல்வேறு வேறுபாடுகளை உண்டாக்கி வருகின்றது.
இந்நிலையில் அனைத்து மாணவா்களும் கொரோனா ஊரடங்கில் வீட்டில் வீனாக பொழுதை கழிக்கும் நேரத்தை பயனுள்ளதாக மாற்ற, தொடா் கற்றலை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு பாடநூல் மூலம் பயிலும் மாணவா்களுக்கு பயன்படும் வகையில் இணையதளம் மூலம் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவா்கள் எளிதாக கற்கும் வகையில் உருவாக்கப்பட்ட பாடங்களை படிப்பது எப்படி என்பது தொடா்பான வீடியோவை உங்கள் பாா்வைக்கு வைத்துள்ளோம் பாா்த்து பயனடையுங்கள்,