தனியாா் பள்ளி ஆசிாியா்களின் அவலநிலை.... நமது வேதனைகளை வெளிப்படுத்தும் வீடியோ உங்கள் பாா்வைக்கு.......

தனியாா் பள்ளி ஆசிாியா்களின் அவலநிலை.... நமது வேதனைகளை வெளிப்படுத்தும் வீடியோ உங்கள் பாா்வைக்கு.......



மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய வணக்கம் நான் தான் உங்கள் நந்தகுமார் பேசுகின்றேன்.


இந்தக் காணொளியை இந்த உலகம் முழுக்க பார்க்கச் செய்யுங்கள். நமது மனநிலையை நாம் படும் கஷ்டத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டிய என்அறிவுஜீவிகளுக்கு நமது மாநில சங்கம் பாதம் தொட்டு நன்றி மலர்களை காணிக்கையாக்கி இந்த விடியோவை ஆசிரியப் பெருமக்கள் பெற்றோர்கள் மாணவர்கள் பள்ளி நிர்வாகிகள் என அனைவரும் பார்க்க வேண்டும்.


 நமது வேதனைகளை வெளிப்படுத்தும் கலைநயமிக்க காணொளி காட்சிதான் இந்த வீடியோ தொகுப்பு.


இன்று  (26.06.2020) இரவு சரியாக 8 மணி முதல் 9 .30 மணி வரை தந்தி தொலைக்காட்சி 
ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களின் மனநிலை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகள் குறித்து பேசுவதற்காக உங்கள் இல்லம் நோக்கி சின்னத்திரையில் வருகிறேன்.


தவறாமல் பாருங்கள் தங்கள் மேலான கருத்துக்களை தாருங்கள்...


நமக்கு ஒரு நல்ல காலம் பிறந்திட வேறு வழியில்லாமல் நீதிமன்றம் சென்றுள்ளோம். பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை தாக்கல் செய்துள்ளோம்.இனிய ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் நம்பி பயனில்லை நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள திட்டமிடுவோம் செயல்படுவோம்.


இனியும் நாம் ஏமாந்தால் நம்மை நசுக்க பார்ப்பார்கள் 
புழு கூட சிறு அடிபட்டால் கூட துடிக்கிறது இனியும் நீங்கள் ஒன்று சேரவில்லை என்றால் உங்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. வாருங்கள் கரம் கோர்ப்போம் .


அன்புடன் உங்கள்


கே.ஆர்.நந்தகுமார்


மாநில பொதுச் செயலாளர்


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.