பள்ளி கட்டணம் வசூலித்தால் குண்டர் சட்டத்தில் கைது – முஸ்லீம் லீக் கோரிக்கை..!
கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடெங்கிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பள்ளி கட்டணங்களை வசூலித்தால் தனியார் பள்ளிகளின் தாளாளர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சராசரி மக்களின் வாழ்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. மேலும் விலைவாசி மின்கட்டணம் என பல பிரச்சனைகளை நடுத்தர குடும்பங்கள் சந்தித்து வருகின்றனர்.
இந்த ஊரடங்கால் மாத சம்பளம் அல்லாது தினக்கூலி செய்பவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலைமையில் பள்ளி கட்டணங்கள் வசூலிப்பது தவறான ஒன்று. மேலும் தனியார் கல்வி துறை பள்ளிக்கட்டணங்களை இஎம்ஐ இல் கட்டுவதற்கான புதிய யுக்தியை கொண்டு வந்துள்ளது.
எனவே, பள்ளிக்கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் தாளாளர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து தமிழ்நாடு லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, “இந்தியாவை பொறுத்தவரை மார்ச் 22-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மூடப்பட்ட காரணத்தால், வேலையின்றி, வருவாயின்றி மக்கள் தவித்து வந்தனர்
ஜூன் 1-ம் தேதி முதல் ஒரளவு ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு, தற்போது தான் சிலர் பணிக்கு செல்ல தெடாங்கியுள்ள போதிலும், பொருளாதார சீரழிவு காரணமாக பல நிறுவனங்கள் தொழிலாளர்களை குறைத்துள்ளது. இந்நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் வருவாயின்றி தவித்து வருவதால், தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் கல்வி கடன் பெறும் வசதியை தனியார் பள்ளிகளே செய்து தருகின்றனர்.
தற்போது கல்வி கட்டணத்தை தனியார் நிதி நிறுவனங்கள் பள்ளிக்கு செலுத்தி விட்டு, அதனை இ.எம்.ஐ. எனும் மாத தவணை முறையில் பெற்றோர்களிடமிருந்து வசூலிக்கும் செயலில் இறங்கியுள்ளன.கொரோனா வைரசை அடுத்து ஊரடங்கால் பெற்றோர் வேலையில்லாமல், வருமானம் இல்லாமல் உள்ள சூழலில் பள்ளிகள் கட்டணம் செலுத்த கூறுவது நியாயமற்றது.
இனிமேல் கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து பெற்றோர்களிடம் இருந்து புகார் வந்தால் அந்த பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்ய வேண்டும் . மேலும் ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பி பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது. அப்படி மீறி கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளியின் தாளாளரை குண்டர்சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளாா்.
அய்யா முஸ்லீம் லீக் தலைவா் வி.எம். முஸ்தாபா அவா்களுக்கு ஒரு வேண்டுகோள். தமிழகத்தில் எந்த மாதிாியான பள்ளிகள் கட்டாய வசூலில் ஈடுபட்டுள்ளனா் என்று தங்களுக்கு நன்றாகவே தொியும். தமிழகம் முழுவதும் ஒரு 100 பள்ளிகள் அப்படி இருக்கின்றன. அந்த பள்ளிகளின் மீது நேரடியாக புகாா் அளித்து குண்டா் சட்டத்தில் தள்ள வேண்டியது தானே.
பொத்தம் பொதுவாக அனைத்து பள்ளி நிா்வாகிகள் மீதும் குற்றம் சுமத்துவது அபத்தம். உங்கள் அறிக்கைகள் கல்வி கொள்ளையா்களை ஒன்றும் செய்யாது. உண்மையான கல்வி சேவையாற்றும் பலரை பாதிக்கின்றது.
அறிக்கை விடுவதற்கு முன்பு அனைத்தையும் ஆராய்ந்து பாா்த்து செயல்படுங்கள்.