இக்கட்டான சூழ்நிலையில் எங்களோடு இருங்கள்...! வெற்றி உங்களை தேடி வரும்.....!!
மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும்
இனிய மாலை வணக்கம்
நான் தான் உங்கள் நந்தகுமார் .
சேலம் மாவட்டத்திலிருந்து முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் மெயில் ஒன்றை அனுப்பி இருக்கிறார் .அதில் 2019. 20
2020 ... 21 ஆம் ஆண்டுக்கான பழைய புதிய கல்விக் கட்டணத்தை கேட்கமாட்டோம்.
ஆன்லைன் வகுப்புகள் நடத்தினாலும் அதற்கும் எந்த கட்டணமும் கேட்க மாட்டோம் என்று உறுதி கூறுகிறோம் என்கிற அடிப்படையில் உறுதிமொழி கடிதம் எழுதி வாங்குகிறார்கள்.பள்ளி நிர்வாகிகள் கல்வி கட்டணம் வசூலித்தால் அவர்கள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்ற மிரட்டலுடன் பள்ளி நிர்வாகிகள் யாரும் அவசரப்பட்டு எழுதிக் கொடுக்க வேண்டாம்.
இது சம்பந்தமான பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அரசுடனும் இயக்குனர்களுடன் நமது மாநில சங்கம் பல்வேறு கோரிக்கை மனுக்களை வைத்து பேசிக் கொண்டிருக்கிறோம். எனவே மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் மிரட்டி உங்களிடம் எழுதி வாங்கினால் நீங்கள் எழுதித் தந்தால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பாவீர்கள்.
அதேபோல் காலாண்டு அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை கூட தர வேண்டாம் என்று அரசு அறிவித்த பின்னரும் சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் விடைத்தாள்களை கேட்பதாக தகவல்கள் வருகிறது என்று யாரேனும் கேட்டால் விடைத்தாள்களை கொடுக்காமல் பெற்றோர்களிடம் கொடுத்து விட்டோம். இனி திரும்ப பெற முடியாது எனச் சொல்லி மார்க்ஸ் கார்டு
மார்க் ரிஜிஸ்டர் மட்டும் கொடுத்து உங்கள் மாணவர்கள் மதிப்பெண்களைப் பெற்று ஆல் பாஸ் மதிப்பெண் பட்டியலைப் பெற்றுகொள்ளுங்கள்.
பள்ளி எப்போது திறக்கும் மாணவர் சேர்க்கை எப்போது செய்வோம் புதிய பழைய கல்வி கட்டணம் எப்போது வசூல் செய்வோம் எப்போதும் தேர்வு எவ்வளவு பாடங்கள் குறைப்பார்கள் என்று தெரியாத நிலையில் இப்பொழுது விற்கும் தமிழ்நாடு பாடநூல் நிறுவன புத்தகங்கள் செல்லுமா செல்லாதா என்று தெரியாத நிலையில் முதல்
பருவ பாட புத்தகங்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி வற்புறுத்துகிறார்கள்.
புத்தகங்களை வாங்கி ஏமாற வேண்டாம் எப்படி வாங்குவீர்கள் பணம் எங்கு இருக்கிறது.
மாணவரே இல்லாத பள்ளியில் யாருக்கு கற்றுக் கொடுப்பீர்கள் என்பதை புரிந்து கொண்டுபுதிய பாட புத்தகங்களை யாரும் வாங்கக் கூடாது என்று நமது சங்கத்தின் சார்பில் முடிவெடுத்திருக்கிறோம் என்பதை அனைவர் கவனத்திற்கும் கொண்டு வருகின்றோம் .பள்ளி நிர்வாகிகள் பார்த்து புரிந்து நடந்து கொள்ளுங்கள்.
அன்புடன் உங்கள்
கே.ஆா். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.