நா்சாி பிரைமாி பள்ளிகளை தரம் உயா்த்தி ஆா்.டி.இ. சட்டத்தை முழுமையாக அமல் படுத்த வேண்டி விண்ணப்பம்
அனுப்புதல்
கே .ஆர்.நந்த குமார். மாநில பொதுச்செயலாளர். தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம். க.எண்.6.
ஏகாம்பரம் தெரு. பம்மல் சென்னை .75.
பெறுதல்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்
புனித ஜார்ஜ் கோட்டை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் சென்னை-9.
பொருள்.... அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டம் 2009 இன் படி ஐந்தாம் வகுப்பு வரை நடைபெறும் நர்சரி பிரைமரி பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு படித்த அதே பள்ளி மாணவர்களை ஆறாம் வகுப்பு தொடர்ந்து அதே பள்ளியில் படித்திட நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி வேண்டுதல் விண்ணப்பம்..
ஐயா வணக்கம்
அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டம் 2009 இன் படி தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் படி மாணவர்களை தொடர்ந்து சேர்த்து கல்வி கற்பித்து வரும் தனியார் பள்ளிகளில் கிராமம் முதல் நகரம் வரை உள்ள நர்சரி பிரைமரி பள்ளிகளின் பங்கு மகத்தானது என்பதை தாங்கள் அறிவீர்கள்.
அந்த நர்சரி பிரைமரி பள்ளிகளில் ஆரம்பம் முதல் எல்கேஜி வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் இன்று ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பிற்கு ஆர்.டி.இ. கல்வி சட்டப்படி எந்த பள்ளியில் சேர்வது எந்தப் பள்ளியில் இலவசமாக சேர்ப்பார்கள் என்கிற ஐயப்பாட்டோடு தொடர்ந்து படிப்பதா அல்லது படிப்பை விட்டு விடலாமா என்கிற ஏக்கத்திலும் எண்ணத்திலும் லட்சக்கணக்கான குழந்தைகள் அடுத்தகட்ட கல்வியை தொடர முடியாமல் தத்தளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து அனைவருக்கும் இலவச கட்டாய கல்விச் சட்டப்படி எட்டாம் வகுப்பு வரை இலவச கல்வி என அறிவித்துவிட்டு இன்று ஐந்தாம் வகுப்போடு நிறுத்து கிறோமே என்ற ஏக்கத்தில் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகிகளை தொடர்ந்து ஆறாம் வகுப்பு நடத்துங்கள் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.
அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டத்தில் கூட அனைத்து பள்ளிகளும் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு வரை அரசு அங்கீகாரத்தோடு இயங்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதையெல்லாம் கருத்தில்கொண்டு
தமிழக அரசு தாயுள்ளத்தோடு தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து நர்சரி பிரைமரி பள்ளிகளிலும் வருகிற ஆண்டு மாணவர்கள் இடைநிற்றலே இல்லாத ஆண்டாக ஆக்கிட அந்தந்த கிராமங்களில் நகரங்களில் மாநகரங்களில் குறைந்தபட்சம் விரும்புகிற பள்ளிகளுக்காவது இந்த ஆண்டு ஆறாம் வகுப்பும் வருகிற ஆண்டுகளில் ஏழு எட்டாம் வகுப்பு தொடங்க அனுமதி தந்து நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தினால் எல்லோரும் தடையில்லா தரமான கல்வி பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட தமிழக அரசு பேருதவி புரிந்ததாக இருக்கும்.
எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உயர்திரு பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் ஆணையாளர் இயக்குனர் பெருமக்கள் இணைந்து நல்லதொரு முடிவெடுத்து நர்சரி பிரைமரி பள்ளிகளை இந்த ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட நூற்றுக்கணக்கான நர்சரி பிரைமரி பள்ளிகள் வேண்டுதல் விண்ணப்பத்தினை தங்களுக்கு சமர்ப்பித்துள்ளார்கள்.
அதனை ஏற்று அரசாணை வெளியிட்டு தொடர்ந்து மாணவர்கள் அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்க ஏதுவான சட்டத்தை உடனே இயற்றிட வேண்டுமாய் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் இருகரம் கூப்பி வேண்டி கேட்டுக் கொள்கின்றோம்.
தங்கள் உண்மையுள்ள
கே ஆர் நந்தகுமார்
மாநில பொதுச்செயலாளர்
சென்னை .75 .
நாள் 30. 05 .2020