காலாண்டு அரையாண்டு விடைத்தாள் கொடுக்க வேண்டாம். அரசு தோ்வுகள் துறை அறிவிப்பு, நமது சங்கத்தின் முயற்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி

 காலாண்டு அரையாண்டு விடைத்தாள் கொடுக்க வேண்டாம். அரசு தோ்வுகள் துறை அறிவிப்பு, நமது சங்கத்தின் முயற்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி.....!



அனுப்புதல் ...
கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர் 
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் . எண்.6. ஏகாம்பரம் தெரு பம்மல் சென்னை 25 செல்லிடப்பேசி எண் 
94 43964053


பெறுதல் ...
உயர்திரு. தேர்வுத் துறை இயக்குனர். அவர்கள் .
அரசு தேர்வுத்துறை இயக்ககம்.
 டி.பி.ஐ. வளாகம் கல்லூரி சாலை சென்னை 6


மதிப்பிற்குரிய அய்யா வணக்கம்.


பொருள்


காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் விடைத்தாள்கள் பெற்றோர்களிடம் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் கொடுத்து திரும்ப பெற வில்லை. தற்போது பெற்றோர்களிடம் விடைத்தாள் இல்லை என்று பதில் வந்துள்ளதால் பள்ளியில் உள்ள தேர்வு தொடர்பான மற்ற ஆவணங்கள் அடிப்படையில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டி கோரிக்கை விண்ணப்பம்....


தமிழக அரசு கொரோனா நோய் தொற்று கிருமி ஒரு மாணவனுக்கு கூட தொட்டு விடாமல் இருப்பதற்காக மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு தரப்பு மக்களின் கோரிக்கையை ஏற்று ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமல்ல பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு மாணவர்களின் அரசு பொதுத்தேர்வுகளையும் ரத்து செய்து தொற்று நோயிலிருந்து பாதுகாத்து அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்துள்ளதை எமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் உளப்பூர்வமாக வரவேற்கிறது.


இவ்வேளையில் அரசு தேர்வுத்துறை இயக்குனர் அவர்களின் செயல்முறைகளில்
பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளது.


 தனியார் பள்ளிகள் தரமான கல்வியை உறுதி செய்வதற்காகவும் 100 சதவீதம் வெற்றியை மட்டுமல்ல மாநில அளவில் மாவட்ட அளவில் பாட அளவில் முதல் இடம் பெறுவதற்காக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மாணவர்களுக்கு பல்வேறு பாடங்களையும் பல்வேறு மாதிரி தேர்வுகளை நடத்தி Sleep Test மற்றும் Weekly Test .Monthly Test Cyclic Test Revision Test Mid Term நடத்தி மாணவர்களை தயார் செய்து தரப்பட்டு அவர்கள் விடைத்தாள்களை ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் மாணவர்களையும்  அமரவைத்து ஒவ்வொரு மாணவனும் எவ்வளவு மதிப்பெண்களை   பாட வாரியாக பெற்று இருக்கிறார் என்று பெற்றோர்களுக்கு காட்டி குறைகளை சரிசெய்ய சொல்லி விடைத்தாள்களைஅவர்களிடம் கொடுத்து அனுப்பி இருக்கின்றோம்.


அதேபோல் காலாண்டு அரையாண்டு தேர்வு விடைத்தாள்களையும் பெற்றோர்களுக்கு தந்து இன்னும் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருக்கிற நேரத்தில்தான் கொரோனா எனும் கொடிய நோயின் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும்தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கையின் காரணமாக தேர்வே இல்லாமல் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து இருக்கிறார்கள்.


இந்நிலையில்  இல்லாத தேர்வு விடைத்தாள்களை ஒப்படைக்க வேண்டும் என்று தாங்கள் கேட்டு அரசாணை பிறப்பித்தால் இவர்கள் இக்கொடிய நேரத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பள்ளிக்கு வர இயலாத நேரத்தில் எவ்வளவு தகவல் அளித்ததும் பெற்றோர்கள் விடைத்தாள்களை கொண்டுவந்து பள்ளியில் தரவில்லை.


இந்தக் கொடியை சூழ்நிலையை புரிந்துகொண்டு காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களை கணக்கிடுவதற்கு விடைத்தாள்களை தவிர்த்து மற்ற ஆவணங்களான Progress Rank Card மற்றும் Mark Register ல் பதியப்பட்டிருக்கும் மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொண்டு தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகின்றோம்.


தேர்வு விடைத்தாள்கள் வேண்டும் என்று நீங்கள் அடம் பிடித்தால் பல பள்ளிகளில் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. மாணவர்களை அவசரமாக வரவழைத்தோ வீட்டில் இருந்தோ கேள்வித்தாள்களை கொடுத்து புத்தகத்தை பார்த்து பெற்றோர்களும் உடன் இருந்து அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக விடைகளை எழுதி சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் கொடுத்து மதிப்பெண்களை போட வைத்து உங்களிடம் விடைத்தாள்களை சமர்ப்பிக்கலாம்.


 அதற்கு தயவு செய்து நீங்கள் இடம் தரவேண்டாம். அல்லது பள்ளியிலே வரவழைத்து எழுதினாலும் சமூக இடைவெளி இல்லாமல் கொரோனா நோய் தொற்று வருவது உறுதி ஆக்கப்பட்டு பலர் இறக்க தேர்வுத்துறை காரணமாக அமையும். அந்த பாவத்திற்கு ஆளாக வேண்டாம்.


அல்லது மற்ற மாவட்டங்களில் செய்வதுபோல் இந்த மதிப்பெண் பட்டியலை வைத்து ABCD என்று Grade System போட்டு விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை.


அல்லது இந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியல் மேல்நிலைவகுப்புக்கு தேவையில்லை என்ற காரணத்தால் தமிழக அரசின் உத்தரவுப்படி அனைவரும் தேர்ச்சி என்ற ஒரு மதிப்பெண் பட்டியலை அல்லது சான்றிதழை தந்துவிட்டால்  இந்த பிரச்சனையில் இருந்து விடுபட்டு விடலாம்.


அல்லது தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் செலுத்தி இருக்கின்றோம்.தேர்வு நடத்தாமல் தேர்வு கட்டணத்தை அரசு வைத்திருப்பது தவறு. மூழுஆண்டு கேள்வித்தாள் தயாராக தங்களிடம் உள்ளது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தேர்வை நடத்துங்கள் எங்கள் தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத தயாராக இருக்கிறார்கள். தேர்வு எழுதிய விடைத்தாள்களை திருத்தி முழுமையான மதிப்பெண்கள் கிடைக்கப்பெற்ற பின்னால் வழக்கம்போல் நீங்கள் தேர்வு முடிவுகள் வெளியீடுங்கள். அப்பொழுது எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல் எல்லாம் சரியாக இருக்கும்.


இவ்வளவு சிக்கல்கள் இடையூறுகள் கொரோனா நோய் தொற்று உள்ள இக்காலகட்டத்தில் பிரச்சனையில்லாமல் தேர்வு துறையை வழக்கம்போல் சிறப்பாக கொண்டு சென்று துறைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் உண்மை எதார்த்தத்தை புரிந்து கொண்டு காலாண்டு அரையாண்டு விடைத்தாள்களை கேட்பதை கைவிட்டு பள்ளி நிர்வாகம் தரக்கூடிய ஆவணங்களைக் கொண்டு மதிப்பெண்கள்யிட்டு அனைவரும் பாஸ் என்கிற மாண்புமிகு தமிழகமுதல்வரின் எண்ணத்துக்கு இடையூறு இல்லாமல் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பள்ளிகளுக்கும் மன உளைச்சலை தராமல் எங்கள் தனியார் பள்ளி மாணவர்கள் பெற்ற தரமான மதிப்பெண்களை தவறாமல் தந்து 
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டு உதவ வேண்டுமாய் எமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றோம்.


நன்றியுடன் உண்மையுள்ள 
கே ஆர் நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர். தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் சென்னை 75 
16 .06 .2020


நமது சங்கத்தின் இந்த கோாிக்கையில் உள்ள நியாயத்தை உணா்ந்து அரசு தோ்வுகள் துறை புதிய அறிவிப்பொன்றை செய்துள்ளது, அதில் 10 மற்றும் 11 வகுப்பு காலாண்டு, அரையாண்டு வினாத்தாட்களை கேட்க வேண்டாம், வினாத்தாட்கள் கொடுக்காத பள்ளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது,


பல பள்ளி நிா்வாகிகளின் கோாிக்கையை ஏற்று நமது சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் கே.ஆா்,நந்தகுமாா் அவா்கள் அனுப்பிய கோாிக்கை மனு ஒருசில மணி நேரத்திற்குள்ளாகவே பாிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது நமது சங்கத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி.