பள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது...! எப்போது தொியுமா...?

 பள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது...! எப்போது தொியுமா...?


நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்றின் காரணமாக கடந்த மார்ச் 16 முதல் பள்ளி கல்லூரிகள் தற்போது வரை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் ஏற்பட்ட போதிலும் இன்னும் பள்ளி கல்லூரிகள் திறப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மண்டலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்கலாம் என ஒரு தகவல்கள் வெளியானது. ஆனால் மத்திய அரசானது அதனை மறுத்து பள்ளிகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு பிறகே திறக்கப்படும் என்று அறிவித்து உள்ளது.


மேலும் கல்லூரிகளும் ஆகஸ்ட் 15 க்கு பிறகே திறக்கப்படும் என்றும், அதற்குள் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், மேலும் நடைபெற உள்ள அனைத்து தேர்வுகளை ஒன்றாக முடித்து விட்டு அதற்கான தேர்வு முடிவுகளையும் அறிவித்த பின்னரே ஒரு சேர பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு மாநில அரசுகள், ஆன்லைன் கல்வி முற்றிலும் தீர்வாகாது என்றும், படிப்படியாக பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.