ஒன்றுபடுவோம் ... ! வெற்றி பெறுவாம்...!! பள்ளி நிா்வாகிகளுக்கு முக்கிய வேண்டுகோள்...!

ஒன்றுபடுவோம் ... ! வெற்றி பெறுவாம்...!!


மதிப்பிற்குரிய பள்ளி நிர்வாகிகளுக்கு இனிய இரவு வணக்கம் நான்தான் உங்கள் நந்தகுமார் 


சனிக்கிழமை காலை எட்டு முப்பது மணிக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை அவரது இல்லத்தில் கோபிசெட்டிபாளையத்தில் சந்திப்பதாக திட்டம் இருந்தது. அமைச்சர் அவர்கள் வந்தால் அனைத்து சங்கங்களையும் ஒன்றாக அழைத்து வாருங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக செய்து வருகின்றோம். தனித்தனி சங்கங்களாக சென்றால் தனித்தனியாக முடிவுகளை எடுக்க வேண்டிவரும். எந்த முடிவும் ஒழுங்காகஎடுக்காமல் தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதால் நெல்லிக்காய் போல் சிதறி இருக்கக்கூடிய பள்ளி நிர்வாகிகளையும்
பலசங்கங்களையும் ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றோம். 


எனவே முழுமையான வெற்றி பெறுவதற்குரிய பணிகளை திட்டமிட்டு செய்து வருகின்றோம். எனவே சனிக்கிழமை கோபிசெட்டிபாளையம் செல்லும் பயண திட்டத்தை ரத்து செய்து இருக்கின்றோம். 


எனவே வெளியூரில் இருந்து வரக்கூடிய பள்ளிநிர்வாகிகள் தயவுசெய்து வரவேண்டாம்.
 
அதற்கு முன்பாக நமது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் ஆயாக்கள் ஓட்டுனர்கள் நடத்துனர்கள் என அனைவரிடமும் தனித்தனியாக வெள்ளைத்தாளில் கோரிக்கை மனுவினை எழுதி ஒவ்வொருவரும் கையெழுத்திட்டு ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தனித்தனியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு சென்னைக்கு பதிவஞ்சலில் அனுப்ப வேண்டும் என்று அன்போடு வேண்டுகின்றேன். 


நீங்கள் கோரிக்கை மனுவினை எவ்வாறு எழுத வேண்டும் என்ற ஒரு மாதிரி மனுவினை உங்களுக்கு அனுப்புகின்றோம். அதை அப்படியே எழுதவும் இன்னும் சில கோரிக்கைகளும் உங்களுக்குள் இருந்தால் அதையும் சேர்த்து எழுதி தவறாமல் அனுப்பி மாநிலத் தலைமைக்கு அனுப்பி வைக்கவேண்டும். 


நீங்கள்  கோரிக்கை விண்ணப்பத்தை
அனுப்பியதற்கான ஆதாரத்தை எங்களுக்கு அனுப்ப வேண்டும்.


ஒவ்வொரு பள்ளி நிர்வாகியும் உங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய அனைத்து பள்ளி நிர்வாகிகளையும் இதேபோல் கோரிக்கை மனுவினை எழுத வைத்து முதல்வருக்கு அனுப்பி தகவல் தரவேண்டும்.


 மாநில மாவட்ட நிர்வாகிகள் உங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி நிர்வாகிகளையும் தவறாமல் லட்சக்கணக்கான கோரிக்கை மனுவினை முதல்வருக்கு அனுப்பி ‌ மாநிலத் தலைமைக்கு வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்க வேண்டும்.


இது  கொரோனா காலம் மட்டுமல்ல போராட்ட காலம்..... என்பதால் நம்மால் தெருவில் இறங்கி போராட முடியாது.


 எனவே அகிம்சை முறையில் மக்களுக்கும் அரசுக்கும் தெரிவிக்கும் வகையில் நாம் இந்த பணியை இருக்கிற இடத்திலே ஐந்து நிமிடத்தில் இந்த காரியத்தை செய்து முடிக்கலாம்.


 அது உங்கள் மனதை பொருத்து நமது பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் 
புரிந்து கொண்டு ஒற்றுமையோடு செயல்பட வேண்டிய காலம் இது. 


இப்பொழுது நீங்கள் இதை செய்யவில்லை என்றால் பின்னர் பெரும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டி வரும் என்பதை உணர்ந்து உடனே ஒவ்வொருவரும் ஆளுக்கு 10 பள்ளி நிர்வாகிகளை சென்று நேரில் பார்த்து கைபேசியில் பேசி அனைவரையும் நமது மாநில சங்கத்தில் உறுப்பினராக்கி லட்சக்கணக்கான கோரிக்கை மனுக்களை அனுப்பிட வேண்டும். 


இது என் அன்பு கட்டளை தனியார் பள்ளி நிர்வாகிகளின் 
வாழ்வும் தாழ்வும் உங்கள் கையில் தான் உள்ளது.
 உங்கள் ஆதரவு கரங்களை நீட்டுங்கள் உயர்த்துங்கள் உங்கள் வாழ்வு மட்டுமல்ல 
நம் அனைவர் வாழ்வும் உயரும் என்ற நம்பிக்கையோடு இன்றே இப்பொழுதே களமாடுங்கள்... ஒன்றுபடுவோம் அகிம்சை வழியில் போராடுவோம் 
வெற்றி பெறுவோம் வெற்றி கிடைக்கும் வரை இடைவிடாது போராடுவோம்
 நாளை நமதே.....


நன்றியுடன் உங்கள் 
கே .ஆர் .நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.