ஐ.நா. தூதராகும் சலூன்கடைக்காரா் மகள்

ஐ.நா. தூதராகும் சலூன்கடைக்காரா் மகள்




பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பாரட்டிய மதுரையைச் சேர்ந்த சலூன் கடைக்காரரின் மகளை ஐ.நா.வுக்கான நல்லெண்ணத் தூதராக நியமித்துள்ளது மத்திய அரசு.

நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டது மட்டுமன்றி, ஜெனிவாவில் நடைபெற இருக்கும் வறுமை குறித்த மாநாட்டிலும் பேச வாய்ப்பு வழங்கபட்டுள்ளது.
 

மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். இவர், தனது மகள் நேத்ராவின் எதிர்கால கல்வி மற்றும் திருமணத்திற்காக பல ஆண்டுகளாக சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தில் இருந்து அப்பகுதியில் வசிக்கும் 1,000த்துக்கும் மேற்பட்டோருக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளார்.

இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சலூன் கடை உரிமையாளர் மோகனைப் பாராட்டினார்.

அவர் பேசியபோது “மதுரையில் சலூன் கடை வைத்திருக்கும் மோகன் என்பவர் தனது மகளின் கல்விக்காக ரூ.5 லட்சம் பணம் சேமித்து வைத்திருந்தார். இதனை ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உதவுவதற்காக செலவிட்டுள்ளார். தனது வருமானம் முழுவதையும் மக்களுக்காக செலவு செய்து வருகிறார். இவருக்கு எனது பாராட்டுகள்” என பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.

 



இந்நிலையில், அவரது (மோகன்) மகள் நேத்ரா ஐ.நாவுக்கான நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெனிவாவில் நடைபெறும் வறுமை தொடர்பான மாநாட்டிலும் பேச இந்த மாணவிக்கு வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.


பெற்றோா்கள் மற்றும் பள்ளிகள் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வியோடு பொதுச்சேவை ஈடுபாட்டிற்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும். அப்போது தான் நேத்ரா போன்ற மாணவிகள் உருவாவாா்கள். 


மாணவி நேத்ராவையும் அவாின் பெற்றோரையும் மெட்ரிக்குலேசன் றியூஸ் மனதார வாழ்த்துகின்றது.