ஆா்.டி.இ. கல்விக் கட்டணம் 40 சதவிகிதம் விரைவில் வந்துவிடும்.

ஆா்.டி.இ. கல்விக் கட்டணம் 40 சதவிகிதம் விரைவில் வந்துவிடும்.


ஆர். டி ‌.இ. 2018 19 ஆம் கல்வி ஆண்டுக்குரிய கல்வி கட்டண பாக்கி சென்னை மாவட்டத்திற்கு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. தற்போது ரூபாய் 12 கோடி சென்னை மாவட்டம் உட்பட விடுபட்ட மெட்ரிக் பள்ளிகளுக்கு வந்துள்ளது.


நர்சரி பிரைமரி பள்ளி களுக்கு மாநிலம் முழுக்க 40% கல்விக்கட்டணபாக்கி நிலுவையில் உள்ளது. அதை உடனடியாக வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் முதன்மைச் செயலாளர் ஆணையாளர் இயக்குனர்களுக்கு தொடர் நினைவூட்டல் நமது மாநில சங்கம்வழங்கியுள்ள நிலையில்..... நிதித்துறையில் கையெழுத்துக்காக காத்துள்ளோம்.நிச்சயம் இம்மாத இறுதிக்குள் 40 சதவீதம் வந்துவிடும். 


நர்சரி பிரைமரி பள்ளி நிர்வாகிகள் யாரும் கவலைப்பட வேண்டாம். அதை தொடர்ந்து 2019.. 20 ஆம் ஆண்டுக்குரிய கல்வி கட்டணம் பாக்கியும் மிக விரைவாக கிடைக்க ஏற்பாடு செய்து வருகின்றோம்.


விடுபட்ட பள்ளிகள் தங்கள் கல்வி கட்டணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.


இனி வருங்காலங்களில் அரசு ஒரு மாணவனுக்கு ரூபாய் 32,000  செலவு செய்கிறது. அந்தக் கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளோம்.


அவ்வழக்கில் உங்கள் பள்ளிகளின் பெயர்களை இணைத்துக்
கொள்ளுங்கள். நமது சங்க உறுப்பினர்களுக்கு மட்டும் தான் அந்த வாய்ப்பு கிடைப்பதற்கான பணிகளை செய்து வருகின்றோம்.


காலாண்டு அரையாண்டு கேள்வித்தாள்களை கேட்கக்கூடாது என்று தேர்வுத்துறையிடம் உறுதி செய்து இருக்கிறோம். யாரும் அவசரப்பட்டு விடைத்தாள்களை
கொடுக்க வேண்டாம். நாம் Progress Card & Mark Register ல் கொடுக்கிற மதிப்பெண்கள்தான் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழில் வெளியிடுவார்கள். கவலைப்பட வேண்டாம்.


இந்த விடுமுறை காலத்திலாவது 
பள்ளி நிர்வாகிகள்  ஒருவருக்கொருவர் நமது மாநில சங்கத்தில் அனைவரையும் உறுப்பினர் ஆக்குங்கள்.


தனியார் பள்ளிகளுக்கு எதிராக ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைத்து சமூக விரோத சக்திகளும் இணைந்து பணியாற்றும் போது தனியார் பள்ளி நிர்வாகிகள் நான் மட்டும் இனியும் ஒன்று சேராமல் தனித்தனியாக செயல்பட்டால்  தரம் தாழ்ந்து போய் விடுவோம் என்று எண்ணிப் பார்த்திட வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன். 


என்றும் கல்வி பணியில் உங்கள்


கே.ஆா். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.