அரசு பள்ளிகளில் விடைத்தாள்கள் மாயம்! மறுதோ்வு எழுதும் மாணவா்கள்.... இப்போது கொரோனா வராதா....?
கிருஷ்ணகிரி அருகே விடைத்தாள் மாயமானதால் மீண்டும் பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது
10,11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும் மற்றும் வருகைப் பதிவை பொருத்து 20 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அனைத்து மாணவ- மாணவிகளும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே விடைத்தாள் மாயமானதால் மீண்டும் பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, மாணவியர்கள் சுமார் 15 ற்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு அருகே உள்ள டியூசன் சென்டரில் வைத்து 10 வகுப்பு தமிழ், மற்றும் அறிவியல் தேர்வை ஆசிரியர்கள் முன்னிலையில் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்துகிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர் முருகன் கூறுகையில், போச்சம்பள்ளி அருகே மத்தூர் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் 15 பேரும் அவர்களது பெற்றோருடன் ரேங்க் கார்டு கையெழுத்து இடவே, ஆசிரியரின் இல்லம் அருகே சென்றனர் எனவும் அவர்களுக்கு மறுத்தேர்வு வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
மாணவா்கள் மறு தோ்வு எழுதுவது மத்தூா் அரசுகப் பள்ளியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பல அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் நேரடியாக வரவழைக்கப்பட்டும் கேள்வித்தாள்கள் மாணவா்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்டும் எழுதப்பட்டு வருகிறது. இதையெல்லாம் செய்திகளாக எடுத்துப்போட்டால் இருக்கிற தொலைக்காட்சிகள் போதாது. அந்த அளவிற்கு தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி்கள் தோ்வுகள் ஜரூராக நடைப்பெற்று வருகிறது. இதற்கு பேசாமல் பொதுத் தோ்வையே நடத்தியிருக்கலாம், அப்படி நடத்தியிருந்தால் இவ்வளவு சிக்கல்களே எழுந்திருக்காது.
இம் மாதம் 29ஆம் தேதிக்குள் விடைத்தாள்கள் தர வேண்டும் என்று கல்வித்துறை அதிகாாிகள் நச்சாிப்பதால் தோ்வே வேண்டாம் தோ்வு நடத்தினால் மாணவா்கள் கொரோனா வந்து செத்துப் போய்விடுவா்கள் என்று சொன்ன அரசுப் பள்ளி ஆசிாியா்கள் தான் இப்போது மாணவா்களை பள்ளிக்கு வரவழைத்து தோ்வுகள் நடத்திக் கொண்டு இருக்கிறாா்கள்.
பொதுத்தோ்வை நடத்தியிருந்தால் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்று ஐந்து தோ்வோடு முடிந்து போயிருக்கும். ஆனால் இப்போதோ காலாண்டிற்கு ஏழுத் தோ்வுகள். அரையாண்டுக்கு ஐந்து தோ்வுகள் என்று மொத்தம் 12 தோ்வுகள் எழுதிக் கொண்டிருக்கிறாா்கள், இது தேவையா...? இதற்கெல்லாம் யாா் காரணம்....? சிந்தியுங்கள் மக்களே....!