‘10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த மாணவர்களுக்கு விலக்கு?’ 

‘10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த மாணவர்களுக்கு விலக்கு?’ 



தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 16ஆம் தேதியும், விடுபட்டவர்களுக்கான 12ஆம் வகுப்பு மறுதேர்வு ஜூன் 18ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா பாதிப்பு அதிகமுள்ளதால், மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுகள் அனைத்தும் மாணவர்கள் பயிலும் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் தேர்வு மையமாக செயல்படவுள்ளது.

எனவே, தேர்வறைகள், கட்டடங்கள், மேசைகள், இருக்கைகள் சரியாக இருக்கிறதா. கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்படுகிறதா என்பதை வருகிற 6ஆம் தேதி ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனைத்து பள்ளிகளிலும் உடல்வெப்பநிலை பரிசோதனை கருவிகளை பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் நிதியில் இருந்தோ அல்லது வேறு நிதியில் இருந்தோ வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜூன் 15ஆம் தேதிக்குள் கொரோனா முற்றிலும் குணமாகிவிடும் என கருத முடியாது. எனவே, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை கொரோனா பாதிப்பு முழுவதுமாக நீங்கிய பின்னரே நடத்த வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல், பொதுத்தேர்வுகளுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், அதனை ஒத்தி வைக்க கோரி , ஆசிரியர் சங்கத்தினர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆனாலும், பொதுத்தேர்வுகளை எப்படியும் நடத்தி விட வேண்டும் என்பதில் பள்ளிகல்வித்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொதுத்தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளிகல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். அதன்படி, பொதுத்தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கும். மாணவர்கள் 9.45 மணிக்குள்ளாக தேர்வு மையங்களுக்கு வந்து விட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நிலையில், தேர்வில் இருந்து காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவது குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு தேர்வில் இருந்து விலக்களிப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
 



சாி. உடல் நிலை சரி இல்லாமல் இருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுத விலக்கு அளிக்க முன் வரும் அரசு, இப்போது  நன்றாக உள்ள மாணவர்கள் தேர்வு எழுதிய பிறகு உடல் நிலை பாதிக்க பட்டால் அரசு பின்னர் என்ன பதில்..சொல்ரலும் என்று கேள்வி கேட்கின்றனா்.

 

இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்வது. நம்பிக்கை தான் வாழ்க்கை. புலி வருது புலி வருது என்று வீட்டுக்குள்ளே பதுங்கி இருந்தால் எப்போது வெளியே வருவது. எல்லாவற்றையும் எதிா்கொள்வது தான் வாழ்க்கை. இதுவும் கடந்து போகும் என்று போக வேண்டியது தான். குதா்க்கமாக பேசிக்கொண்டிருந்தால் எதையும் சாதிக்க முடியாது.