மனமுடைந்து மரணமடைந்த 10க்கும் மேற்பட்ட பள்ளி தாளாளா்களுக்கு கண்ணீர் அஞ்சலி.....

மனமுடைந்து மரணமடைந்த 10க்கும் மேற்பட்ட பள்ளி தாளாளா்களுக்கு கண்ணீர் அஞ்சலி.....

தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளுக்கு எதிராக அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் செய்துவரும் பொய் பிரச்சாரங்களால் போடும் அதிரடி சட்டங்களால் கடன் சுமையால் 
மிக மன உளைச்சலுக்கு உள்ளாகி பத்துக்கும் மேற்பட்ட நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகள் மனமுடைந்து மரணம் அடைந்து இருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டு மிகவும் மனமுடைந்து போய் இருக்கின்றேன்..


மாநிலம் முழுக்க ஏழை எளிய பாமர மாணவ மாணவியர்களுக்கு
தரமான கல்வி தந்து தலைநிமிரச் செய்த தாளாளர் பெருமக்கள்


திருவொற்றியூர் ரகுபதி ராஜா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் ஸ்ரீதரன் அவர்களும் மீஞ்சூர் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் திரவியம் நாடார் அவர்கள்இன்று இறைவனடி சேர்ந்தார்கள் என்கிற துக்ககரமான செய்தி கேட்டு மீளாத்துயரில் அவரது குடும்பத்தார் மட்டுமல்ல தமிழக தனியார் பள்ளிகள் கூட தத்தளித்து வருகின்றோம்.


அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்கு
கிறோம்.


நமது சங்கத்தின் தளகார்தாவாக இருந்து செயல்பட்ட தாளாளர் களின் கனவு மெய்ப்பட நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட இன்று முதல் உறுதி பூணுவோம்.


கண்ணீர் அஞ்சலியுடன்


கே ஆர் நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்


.தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.