சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவு ஆகஸ்ட் 15ல் வெளியீடு

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவு ஆகஸ்ட் 15ல் வெளியீடு


நாக்பூர்: ‘சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 15ம் தேதி வெளிவரும்,’ என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புக்களுக்கான பொதுத்தேர்வு நடந்து கொண்டிருந்தபோது தான், நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பல்வேறு பாடப்பிரிவுகளில் ஒரு சில தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளன. இத்தேர்வுகள் ஜூலை 1ம் தேதி முதல் நடைபெற உள்ளது. மேலும், கொரோனா பரவல் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணியிலும் தாமதம் நிலவி வருகின்றது.


இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று அளித்த பேட்டியில், ‘‘விடுப்பட்ட தேர்வுகள் நடைபெறும் போதே விடைத்தாள் திருத்தும் பணியும் நடைபெறும். ஆசிரியர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே  விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். இப்பணி முடிந்ததும், ஆகஸ்ட் 15ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும். பின்னர், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்,’’ என்றார்.