அவசரப்பட்டு யாரும் புதிய புத்தகங்கள் வாங்க வேண்டாம். 

 அவசரப்பட்டு யாரும் புதிய புத்தகங்கள் வாங்க வேண்டாம். 


மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகளுக்கு 
இனிய மாலை வணக்கம்


 தமிழ்நாடு பாடநூல் கழகம் இந்த ஆண்டுக்கான பாடபுத்தகங்களை வாங்க சொல்லி அறிவுறுத்தி இருக்கிறது.


 அவசரப்பட்டு யாரும் புதிய புத்தகங்கள் வாங்க வேண்டாம். 


பாடங்கள் குறைக்கவும் வாய்ப்பிருக்கிறது.


முதல் பருவம்  நடக்காமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது 


காலாண்டு தேர்வு நடக்குமா நடக்காதா என்று தெரியாது. 


பள்ளிகள் திறப்பது நவம்பர் என்றாகி விட்டால் அந்த புத்தகங்களை வாங்கி என்ன செய்வீர்கள்.


 மாணவர்களிடம் பணம் கொடுக்காத போது கல்வி கட்டணம் வசூலிக்காதபோது எங்கிருந்து பணம் வரும்


 எப்படி புத்தகம் வாங்குவீர்கள். 


வெறுமனே நீங்கள் புத்தகம் வாங்கி என்ன பயன்.. 


சற்று பொருத்திருங்கள்.பாட புத்தகங்களை வாங்குவது குறித்தும்


 பாடம் நடத்துவது குறித்தும் முழுமையாக அரசு வெளியிட்ட பின்னால் புத்தகம் வாங்குவது சிறப்பாக இருக்கும்.


 அவசரப்பட வேண்டாம் என்று பள்ளி நிர்வாகிகள் கருதுகிறார்கள். பின்னர் உங்கள் விருப்பம். உங்கள் விருப்பப்படி நீங்கள் செயல் படுங்கள்.


 நன்றி வணக்கம் 


உங்கள் நந்தகுமார். மாநில பொதுச்செயலாளர்.


அனைவரும் G.S கூறுவது போல்  ஒற்றுமையாக வாங்காமல் இருந்தால்தான் அரசிடமிருந்து சரியான பதில் வரும், இல்லையெனில் புத்தகங்களை விற்று விட்டு, பாடத்திட்டம் குறைக்கப்படுகிறது/இரண்டாம் &மூன்றாம் பருவ புத்தகம் நடத்தினால் போதும் என்று கூறினாலும் நாம் ஒன்றும் செய்ய இயலாது. அனைவரும் சேர்ந்து முடிவெடுப்போம்.


அருண், நாகை


யாருமே இல்லாத கடைக்கு யாருக்கு டீ போடப்போகிறீர்கள். மிகவும் ஜாக்கிரதை. பணத்தை இழந்துவிட வேண்டாம். G. S. வழி நடப்போம். நன்றி.


காா்த்திக், நாகை