மாண்புமிகு தமிழக முதல்வருக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தின் மாதிாி வடிவம்
அனுப்புதல்...
பள்ளி நிர்வாகி/ஆசிரியர் பெயர்/
பள்ளியின் பெயர்
முழு விலாசம்
கைபேசி எண்.
பெறுதல்.....
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
புனித ஜார்ஜ் கோட்டை சென்னை 9
வழி ....மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள்
பொருள்...... ஜூலை ஒன்றாம் தேதி தனியார் பள்ளிகளை திறத்தல் கல்வி கட்டணம் வசூலித்தல் புதிய மாணவர்கள் சேர்க்கை செய்ய அனுமதி வழங்கிட வேண்டும் அல்லது பள்ளிகள் திறக்கும் வரை தனியார் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பள்ளிகள் திறக்கும் வரை தமிழக அரசே மாத ஊதியம் வழங்கி எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி கோரிக்கை விண்ணப்பம்.....
ஐயா..... வணக்கம்.....
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கிருமி தொட்டு விடாமல் இருக்கவும் தமிழகமக்களிள் பெரும் உயிர் பலி ஏற்படாமல் தடுக்கவும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் அனைத்து மக்கள் நலப் பணிகளையும் மனதார பாராட்டுகிறோம்.
இவ்வேளையில் தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளை தவிர அனைத்தும்
திறந்தாகிவிட்டது.
ஒன்றாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் அரசு பொதுத்தேர்வு எழுதாமலேயே அரசுக்கு எதிரானவர்களின் கோரிக்கையை ஏற்று அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்து விட்டீர்கள். மாணவர்களின் தரம் அறிய முடியாமல் போனது எங்களுக்கு கடினமாக இருந்தாலும் இந்த நோய்த்தொற்று காலத்தில் மனித உயிர் மகத்தானது என்பதை உணர்ந்து மாண்புமிகு தமிழக முதல்வர் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு ஏற்றுக்கொண்டோம்.
செப்டம்பர் வரை பள்ளிகள் திறக்காது என்று மாண்புமிகு. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்
மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தற்போதைக்கு பள்ளிகள் திறக்கும் எண்ணமே இல்லை அது குறித்து நாங்கள் இன்னும் சிந்திக்கவே இல்லை என்று தனது பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
எப்பொழுது பள்ளி திறக்கும் மாணவர்களுக்கு எப்பொழுது கற்றலையும் கற்பித்தலையும் உறுதி செய்வது. படித்ததை மறந்து விடுவார்கள்.
புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெறவில்லை.
மார்ச் 17 முதல் பள்ளிகள் மூடி ஆகிவிட்டது.
பழைய கல்வி கட்டணம் குறைந்தது 40% பாக்கி அப்படியே நிலுவையில் உள்ளது. புதிய கல்வி கட்டணம் ஒரு பைசா கூட வசூலிக்க முடியவில்லை. 2018 ..19 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆர்.டி.இ. கல்வி கட்டண பாக்கி 40 சதவீதம் அரசு பாக்கி வைத்துள்ளது.
2019.. 20 ஆண்டுக்கான கல்வி கட்டண பாக்கியை 100% அரசிடம் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் பள்ளி நிர்வாகிகள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் தருவதில் கடந்த இரண்டு மாதங்களாக மிகப்பெரும் மன உளைச்சல் அகலும் கஷ்டத்திலும் நஷ்டத்திலும் எங்களுக்கு தரவேண்டிய ஊதியத்தை தந்து விட்டார்கள்.
தற்பொழுது சம்பளம் தர முடியாமலும் கடன் வாங்க முடியாமலும் தத்தளித்து வருவதை நாங்கள் கண்கூடாக பார்கிறோம்.
அப்படி இருந்தும் பலர் தங்கள் நகைநட்டுகளை வைத்து கடன் வாங்கி எங்கள் சம்பளத்தை தந்தார்கள்.
மத்திய மாநில அரசுகள் பள்ளிக்கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என்று அரசு ஆணை போட்டு எல்லா தொலைக்காட்சி ஊடகங்களிலும் நாள்தோறும் ஒளிபரப்பியதால் பெற்றோர்கள் யாரும் கல்விக்கட்டணம் செலுத்த மறுக்கிறார்கள்.
அதனால் பள்ளியில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வாழ்விழந்து வழி தெரியாமல் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு தத்தளித்து
வருகின்றோம்.
அரசின் எந்தவித நலத்திட்டங்களும் நிவாரண உதவிகளும் எங்களுக்கு கிடைப்பதில்லை.
கல்வி கட்டணம் வசூலித்தால் மட்டுமே தனியார் பள்ளிகள் நடக்கும் இல்லையென்றால் நடக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்
சொத்து வரி ...
கட்டிட வரி
நிலவரி
நீர்வரி
தொழில் வரி
மின்சார கட்டணம். இ.பி.எப்... இ.எஸ்.ஐ. பள்ளி வாகனங்களுக்கான இன்சூரன்ஸ்..
எஃப். சி.
வருமான வரி
சேவை வரி என எண்ணற்ற வரிகளை செலுத்த முடியாமல் தத்தளித்து வருகிறார்கள் இதையெல்லாம் மனதில் கொண்டு தமிழக அரசு மேற்கண்ட வரிகளுக்கு இந்த ஓராண்டுக்கு விதிவிலக்கு வழங்கிட வேண்டும்.
அல்லது தனியார் பள்ளிகள் இக்கொடிய நோய்த்தொற்று காலம் நீங்கும் வரை எந்த வித கட்டணமும் பெறமாட்டார்கள் என்று உத்தரவாதம் அளித்து இருக்கிறார்கள்.
அதுவரை தனியார் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அரசு மாத ஊதியத்தை தந்து உதவ வேண்டும். அல்லது வட்டி இல்லா வங்கி கடன் ஆவது தந்து எங்கள் அனைவரையும் பாதுகாத்திட வேண்டும் என்று அன்போடு வேண்டிகேட்டுக் கொள்கின்றோம்.
அதுமட்டுமல்ல இப்பள்ளியில் பயிலும் அனைத்து வகை குழந்தைகளும் பணக்காரர்கள் அல்ல. 90% மாணவர்கள் மிகவும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஏழை நடுத்தர உழைக்கும் தொழிலாளர்களுடைய குழந்தைகள் ஆவார்கள்.
அவர்களுக்கு தமிழக பாடநூல் கழகத்தின் பாடப் புத்தகங்களை இலவசமாக இந்த ஆண்டு மட்டுமாவது தந்து உதவ வேண்டும்.
பள்ளி திறப்பதற்கு காலதாமதம் ஆவதால் பள்ளி அன்றாட அலுவலக பணிகளை செய்திட புதியமாணவர்கள் சேர்க்கையை செய்திட பழைய புதிய கல்வி கட்டணத்தை வசூலிக்க 2020 .21 ஆம் ஆண்டுக்குரிய அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டப்படி 25% மாணவர்களை சேர்த்திட உடனே அனுமதிவழங்கிட வேண்டுமாய் அனைத்து பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் சார்பாக வேண்டி கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றியுடன்
தங்கள் உண்மையுள்ள
பள்ளி ஆசிரியரின் கையொப்பம்
இடம் ...நாள்... குறிப்பிட்டு அனுப்பவும்.